மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கிறான், திருப்தியடைவதில்லை என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒரு மனிதன் மரணமடையும்போதுதான் அவனுடைய தேடல் முற்றுப் பெறுகிறது என்கிற தத்துவமும் உண்டு. ஆன்மீக விசயங்களிலும்இக்கூற்று பொருந்தும். ஆன்மீக தேடல் எங்கே முற்றுப் பெறும்?
ஆன்மீக ரீதியானதேடல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று கடவுளை மறுப்பதற்காக தேடுதல்
மற்றொன்று கடவுளை தேடுதல்
ஆக மொத்தத்தில் எல்லாரிடமும் தேடல் என்பது குடிகொண்டிருக்கிறது. ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். முன்னமே முடிவுசெய்யப்பட்ட முடிவுகளுடன் நாம் தேடினால் உண்மை என்பது எட்டாக்கனியாகவும் கானல் நீராகவும் ஆகிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் தேடுகிற எல்லாருமே தங்களுடைய முடிவு சரி தான் என்கிற முடிவுடன் தான் தேடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே தேடலில் தாங்கள் எதிர்பார்த்த முடிவுதான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி வரவில்லையெனில் அவற்றை நிராகரித்துவிடுகிறார்கள்.
இயேசு கிறிஸ்து ஒரு மனிதனா அல்லது கடவுளா என்பதையும் மேற்கண்ட இருசாராரும் தேடிக்கொண்டிருக்கீறார்கள் அல்லது அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவரல்லாத ஆன்மீகவாதிகள் அவரும் ஒரு கடவுளாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
இயேசு கடவுள் என்பதை நிரூபிக்க ஆதிகிறிஸ்தவர்கள் அவரின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பிரசங்கித்தனர். நீங்கள் அவரைக் கொலைசெய்தீர்கள். தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்பதே சீடர்களின் முழக்கமாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் உண்டுபண்ணின மாற்றம் அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் விளைவிக்கும் மாற்றங்கள் மகத்தானவைகளாக இருக்கீறது.
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அறியாத சிலர் கல்லறையில் அவரின் பிணத்தைக் காண சென்றார்கள். அங்கே அவரைக் காணாமல் திகைத்தபோது உயிர்த்தெழுதல் செய்தி கேட்டு பரவசத்துடன்திரும்பினர்.
ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்................?
கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்? கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். என்று பவுல் 1கொரிந்தியர்15:17ல் கூறுகிறார். ஆம் கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் கிறிஸ்தவ விசுவாசம் வீணானதாக இருக்கும். கிறிஸ்தவம் என்ற ஒன்றே இருந்திருக்காது. கிறிஸ்த்வர்கள் பொய்யான ஒன்றை நம்புகிறவர்களாக இருந்திருப்பார்கள் (1கொரிந்தியர்15:15). ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அக்காலத்தியவர்கள் எவரும் மறுக்கவியலவில்லை. இயேசுகிறிஸ்துவின் பாவமற்ற தன்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் அக்காலத்திய யூதர்களால் மறுக்கமுடியவில்லை. சரி. 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்றை நாம் இப்போது எப்படி நம்புவது?
பழங்காலச் செய்திகளை நாம் நம்புவதற்கு நம்மிடை இருப்பது வரலாற்று ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளுமே. ஒரு பழங்கால செய்தி கட்டுக்கதையாக இல்லாதபட்சத்தில் அதற்கு சான்று பகரும் ஆவணங்கள் வரலாற்றில் நிச்சயம் இருக்கும். அவ்வாறு அவற்றிற்கு சான்று இல்லையேல் நாம் அதை நம்பத்தேவையில்லை. நம்ம நாட்டிலேதான் புராணக்கதைகளை கூட உண்மை என்று நம்புகிறவர்களாச்சுதே! ( ஓ அதனாலதான் உண்மையை நம்ப மாட்டேங்குறாங்களோ)
இயேசுகிறிஸ்துவின் கல்லறை அன்று எவ்வாறு சான்று பகர்ந்ததோ அதே போல இன்றளவும் அவரின் உயிர்த்தெழுதலை சான்று பகருகிறது. அவரின் கல்லறை கட்டுக்கதை என்று சொல்பவர்களால் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்களை மறுக்கவியலாது. ஜோசிபஸ் என்ற அக்காலத்திய ( கிறிஸ்தவரல்லாதவர்) வரலாற்றாசிரியரின் எழுத்துக்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கின்றன. ஆதாரங்கள் தோண்டத்தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதை நாம் ஏன் நம்ப வேண்டியிருக்கிறது எனில் சிவப்புச் சிந்தனையுடன் வரலாற்று மண்ணை அகழ்வாராய்வு செய்தவர்கள் கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவத்தின் உண்மைகளைக் குறித்த கண்டுபிடிப்புகளினால் கிறிஸ்து அடியவர்களாகமாறியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே ஆவார். இவர் தனது ஆய்வு முடிமுடுவுகள் குறித்துக் கூறும்போது............
I began with a mind unfavorable to it...but more recently I found myself brought into contact with the Book of Acts as an authority for the topography, antiquities, and society of Asia Minor. It was gradually borne upon me that in various details the narrative showed marvelous truth. (William M. Ramsay - St. Paul the Traveler and the Roman Citizen, The Bearing of Recent Discovery on the Trustworthiness of the New Testament).
கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் அவரின் மரணத்தினால் பயந்து மறுபடியும் மீன்ன் பிடிக்கச் என்ற அவருடைய சீடர்கள் உலகத்தைக் கலக்குபவர்கள் என்கிற அடைமொழியை பெற்றிருக்க மாட்டார்கள். உயிர்த்தெழுதல் பொய் எனில் , அந்தப் பொய்க்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயங்காதுபிரசங்கித்திருக்கமாட்டார்கள். . உயிர்த்தெழுதலின் செய்தியைப் பிரசங்கித்ததற்Kகக அவர்கள் தங்கள் உயிரைக்கொடுத்திருக்கமாட்டார்கள். கிறிஸ்தவம் கிறிஸ்துவுடன் புதைந்திருக்கும்.
இன்றைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களைத்தான் தெரிந்து கொள்வார்கள். மற்றவர்களை கடாசிவிடுவார்கள்.நாம் என்ன செய்யப் போகிறோம்?
அன்றிலிருந்து இன்றளவும் வெறுமையாக காணப்படும் கல்லறை சொல்லும் செய்தியை நம்பி கிறிஸ்துவின் அடியவராகலாம். அல்லது வெறுமையுடன் திரும்பலாம். முடிவு நம் கையில்தான்.
கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் செய்தி என்ன?
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச்சொல்லுங்கள். (மத்தேயு.28:6,7)
பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.(மாற்கு16:6)
உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். (லூக்கா.24:5 - 9)
நாமும் நது எல்லா பயங்களும் நீங்கி, நம் தேடலில் நாம் கண்டு கொண்டதை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனெனில் ..............
நமக்கு எதிரிடையாகவும்கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல்ஆணியடித்து; துரைத்தனங்களையும்அதிகாரங்களையும்உரிந்துகொண்டு, வெளியரங்கமானகோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலேவெற்றிசிறந்தார். (கொலோசேயர்.2:14:15)
மேலும் அவர் சீக்கிரம் வரப் போகிறார்.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.
ஆமென், கர்த்தராகியஇயேசுவே, வாரும்.
Author: Bro. Arputharaj Samuel