யோவான் ஸ்நானகன் தன் இரண்டு சீஷர்களுடன் நின்று கொண்டிருந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டி, "இதோ, தேவ ஆட்டுக்குட்டி" என்றார். அநேகமாக, யோவானும் அந்த இருவரும் மேசியாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க வேண்டும். “வந்து பார்” என்று அவர்களை வரவேற்ற ஆண்டவராகிய இயேசுவோடு இருவரும் சென்று தங்கினார்கள். அந்த அனுபவத்திற்குப் பிறகு, “யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்" (யோவான் 1: 40-42). பொதுவாக சமூகங்கள் தனிநபர்கள், தனிக் குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்கள், உறவினர்கள், குலங்கள் மற்றும் கோத்திரங்கள் என அலகுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
ராய் சீக்கியர்கள் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு சமூகம். அவர்கள் சமூகப் படிநிலையில் கீழ்மட்டத்தில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருக்கும் ஒரு ஏஜென்சியில் வேலைக்கு வந்ததின் மூலம் சில இளைஞர்கள் ஆண்டவரைப் பற்றி அறிந்து கொண்டனர். அவர்கள் கர்த்தருக்குள் நன்கு துடிப்போடு வளர்ந்தார்கள். பின்பு ஒருநாள் திருமணத்திற்காக ஹரியானாவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றுள்ளனர், அங்கு அவர்களது உறவினர்கள் உள்ளனர். திருமணங்களின் ஒன்றுகூடலின் (ஐக்கியத்தின்) போது இந்த விசுவாசிகள் தங்கள் புதிய நம்பிக்கையைப் (விசுவாசத்தைப்) பகிர்ந்து கொண்டனர். அங்கிருந்த மக்கள் உற்சாகம் அடைந்தவர்களாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி மேலும் அறிய விரும்பினர். உத்தரபிரதேசத்தில் உள்ள விசுவாசிகள் மிஷன் ஏஜென்சியால் பயிற்சி பெற்று ஹரியானாவுக்கு மிஷனரிகளாக அனுப்பப்பட்டனர். அநேகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்து கொண்டனர். சுவிசேஷம் ஒரு வலை இயக்கம் என்று அழைக்கப்படும் உறவுகள் என்னும் வலை வழியாக பயணித்தது. பண்பாடுகளுக்கிடையிலான (கலப்பு பண்பாடு) மிஷனரிகள் அத்தகைய சேனல்களை (வாய்க்கால்களை) சிரத்தையுடன் தேட வேண்டும் மற்றும் முழு சமூகத்திற்கும் சுவிசேஷம் சென்று சேர அனுமதிக்கலாம்.
எந்தவொரு நபராக இருந்தாலும் தன் சமூகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும் போது தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். சில சூழ்நிலைகளில், மரணத்திற்கான பெரும் ஆபத்து கூட உள்ளது. ஆயினும்கூட, பல குடும்பங்களில் முழு சமூகத்தையும் அவருடைய ராஜ்யத்திற்கு கொண்டு வர முடியும்.
நான் மகிழ்ச்சியுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்