ஆதியாகமம் 3 ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி மனித வீழ்ச்சி என்பது, ‘சுய விருப்பத்தை’ அழித்து ஒரு அடிமையை போல் தனது விருப்பத்தை மாத்திரம் கேட்கும்படியாக மாற்றுவதே சாத்தானின் தந்திரம் (ஆதியாகமம் 3). எந்த எஜமானர்களும் தனது அடிமைகளை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அல்லது தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கவே விரும்புவார்கள், அதற்காகவே கடுமையாக முயற்சிப்பார்கள். இதற்கு எகிப்தின் ராஜாவாக இருந்த பார்வோன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க விரும்பாமலே இருந்தான், அவன் தனது ராஜ்யத்தையே விழுங்கும்படியான வாதைகள் வந்த போதிலும் அவன் தனது முடிவில் மாற்றமின்றி இருந்தானே. இந்த அடிமை எஜமானர்களுக்கு ஒரு எஜமான் சாத்தான், அவனைப் போலவே தங்கள் குடிமக்களை ஒடுக்க விரும்புகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் பரப்பப்பட்ட ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு. ஒரு ரஷ்ய சர்வாதிகாரி எப்போதும் தன்னைச் சுற்றி அதிகாரிகளை வைத்திருப்பார். ஒருநாள் அவர் ஒரு கோழியை கொண்டு வரும்படி தன்னிடம் இருப்பவர்களிடம் கட்டளையிட்டார். அவர்களும் அக்கோழியை உயிரோடு கொண்டு வந்து இறகுகளை இரக்கமின்றி பறித்தனர், மேஜையெல்லாம் இரத்தம் சிந்தியது, அக்கோழி வலியினால் அங்கும் இங்கும் பாய்ந்தது, பயந்தது, ஓடிக்கொண்டேயிருந்தது. பின்னர் அந்த சர்வாதிகாரி ஒரு தானிய கோதுமையை சிதற விட்டார், உடனே கோழி அதை ஆவலுடன் எடுத்து சாப்பிட்டது. பின்னர் அவர் இன்னும் சில தானியங்களை, ஒரே நேரத்தில் சிதறினார். பின்னர் அவர் தனது அதிகாரிகளிடம்: “மக்களையும் இப்படிதான் நடத்த வேண்டும், இரக்கமற்ற அடக்குமுறை. உயிர்வாழ்வதற்கேதுவான எதையாவது அவர்களுக்கு முன் எறியும்போது அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்". இப்படி மக்களின் வாழ்வாதாரத்தை நோக்கமாக சிந்திக்கும்படி வைக்கும்போது அவர்களின் மனதும் சுதந்திரத்தையோ உண்மைநிலையையோ சிந்திக்காமல் விலக்கி வைக்கும் என்பது சாத்தானின் நிலையான தத்துவம். இப்படியாக ஆதிக்கம் செலுத்த விரும்புவோர் மக்களை தந்திரமாக ஒடுக்கவும், ஆணையிடவும், சுரண்டவும் விரும்புபவர்களாக உள்ளனர்.
பல நாடுகளில், எதையும் தேர்வு செய்வதற்கான ‘சுய விருப்பம்’ அரசாங்கத்தால் பறிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ‘நித்திய ஜீவனை’ தேர்ந்தெடுப்பதற்கான ஒரு நபரின் சுதந்திரத்தை கொள்ளையடிக்கும் ‘மாற்று எதிர்ப்பு’ சட்டம் நாடுகளுக்குள் உள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக தேர்ந்தெடுப்பதற்கான ஒரு நபரின் சுதந்திரத்தை மறைக்க செய்யும் கலாச்சார விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, பெண்கள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு கல்விக்கான ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இந்தியாவில் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான ஒரு கலாச்சார அமைப்பிலிருந்து ஒரு குறிப்பு இருக்கிறது; அது என்னவெனில் மக்களை ஒடுக்குங்கள், இதனால் அவர்கள் ‘உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்' எனக்கருதி நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள், அதனால் தங்களுக்கான உரிமைகள் அல்லது ஒதுக்கீடுகள் அல்லது சுதந்திரத்தை கோர மாட்டார்கள். சாத்தான் அரசாங்கம், கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி அதைப் பயன்படுத்தி மக்களின் ‘சுய விருப்பம்’ அல்லது ‘தெரிந்து கொள்வதற்கான சுதந்திரம்’ எல்லாம் பறிக்கப்பட்டு, அவர்கள் சுவிசேஷத்திற்கு பதிலளிப்பதன் மூலம் தங்களின் ஆவிக்குரிய சுதந்திரத்தை இழக்கிறார்கள். ஆனாலும், எந்தவொரு அடக்குமுறையிலிருந்தும் மக்களை விடுவிக்க சுவிசேஷத்திற்கு அதிகாரம் உண்டு.
தேவன் எனக்கு பரிசாக வழங்கிய ‘சுய விருப்பத்திற்கு’ நான் நன்றியுள்ளவனா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J .N. மனோகரன்