வன்முறையைப் பார்ப்பதும், அதைப் பற்றிக் கேட்பதும் மனவருத்தத்தையும், மனச்சோர்வையும் தருகிறது. உண்மையில், உலக மக்கள் தொகை முழுவதும் வன்முறையை நோக்கி உணர்ச்சியற்றவர்களாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் சில.. வீட்டில் குடும்ப வன்முறை; வரதட்சணை மரணங்கள்; கல்லூரி வளாகங்களில் கொடுமையான ராகிங்; உடன்பிறந்தவர்கள், உறவினர்களின் கொலை; ஆசியாவின் பல நாடுகளில் கௌரவக் கொலைகள்; சாலைகளில் நடங்கேறும் சீற்றங்கள், பொது இடங்களில் வெடிகுண்டு; மேற்குப்பகுதியில் நடக்கும் துப்பாக்கிச் சூடு; கலவரங்கள்; மந்திரவாதங்கள், குழந்தை கடத்தல்கள்; சிறைச்சாலை மரணங்கள்; அரசியல் கொலைகள்; உள்நாட்டுப் போர்கள்; நிலவர அமைதிக் காப்புக்குழு உறுப்பினர் கொலைகள் (சட்டத்தை தாங்களே கையிலெடுப்பது); மொபைல் கேம் தற்கொலைகள்… போன்றவையாகும்.
"அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது" (நீதிமொழிகள் 1:16). அதாவது யதார்த்தமாக அல்லது ஏதோ தற்செயலாக தீமையை நோக்கி அவர்கள் திரும்புவதில்லை. மாறாக, தீமை செய்ய விரைகிறார்கள். ஆம், முதலில், அவர்கள் தீங்கு நினைக்கிறார்கள், அதனை கற்பனைக்கு கொண்டு வருகிறார்கள், பின்னர் ஏன் என்பதற்கு நியாயப்படுத்துகிறார்கள் மற்றும் அசை போடுகிறார்கள். இரண்டாவதாக, அவர்களின் இதயம் வெறுப்பு, பொல்லாத திட்டங்கள், பேராசை மற்றும் பொறாமை ஆகியவற்றால் நிரம்பி வழிகின்றது; பின்பதாக அந்த தீங்கை செய்ய, அதற்காக கைகால்களை செயல்படுத்த மனதில் ஊறிப்போகும் தீய எண்ணங்களுடன் அது ஒத்துழைக்கிறது. ஒரு மனிதன் நன்மையோ தீமையோ அதை தன் இருதயத்தில் இருந்துதான் எடுக்கிறான் என்று நாம் மத்தேயு 12:34-37ல் வாசிக்கிறோமே. மூன்றாவதாக, அவர்களின் கைகால்கள் செயல்பட தூண்டப்படுகின்றது, "கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது" (ஏசாயா 59:6-7). அதாவது மக்களே சட்டத்தைத் தங்கள் கையிலெடுக்கிறார்கள், தங்களை நீதிபதி போல் நினைத்து உடனடியாக தீர்ப்பு வழங்கி விட வேண்டும் என துடிக்கிறார்கள். மேலும் மனசாட்சியற்ற வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தாங்கள் நினைத்ததை செயலாற்றுகின்றனர்.
1) தேவ பயம்:
தேவனுக்குப் பயந்தவர்கள் தீமையை வெறுக்கிறார்கள் (நீதிமொழிகள் 8:13). கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது மக்களுக்குக் கற்பிக்கப்படாதபோது, அவர்கள் முட்டாள்களாகவும் மிருகத்தனமாகவும் மாறுகிறார்கள்.
2) அரசாங்க பயம்:
மக்கள் சமூகத்திற்கோ அரசாங்கத்திற்கோ பயப்படுவதில்லை. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க அல்லது நீதி வழங்க ஆமை போல் சட்டம் நிறைய நேரம் எடுக்கும். "துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது" (பிரசங்கி 8:11).
3) கெட்ட கூட்டாளிகள்:
"என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது" (நீதிமொழிகள் 1:15,16) என்பது சாலொமோன் ஞானியின் அறிவுரையாகும்.
4) சீர் தூக்கிப் பார்:
"உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக" (நீதிமொழிகள் 4:26-27). கர்த்தருடைய ஔியில் நம் எண்ணங்களையும் இருதயங்களையும் ஆராய்வது மிக முக்கியம்.
நான் வன்முறையில் அல்லது கொடுமையில் ஈடுபடுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran