யோனாத்தான், ஹீரோவாக கொண்டாடப்படாமல் விடப்பட்ட ஒரு நபர்; ஆனால் உண்மையில் அவன் ஒரு ஹீரோ. அவனும் அவனுடைய ஆயுததாரியும் பெலிஸ்தரின் தாணையத்திற்குள் புகுந்து தாக்கி இருபது பேரைக் கொன்றனர். இது அவர்களுக்கு ஒரு பீதியை ஏற்படுத்தியது மற்றும் பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் (1 சாமுவேல் 14).
அற்ப ராணுவம்:
இஸ்ரவேல் தேசம் சுமார் 400 ஆண்டுகள் நியாயாதிபதிகளின் கீழ் இருந்தது. அந்த நேரத்தில், ஒவ்வொரு கோத்திரத்தாரிடமும் பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ போரிடுவார்கள். சவுலின் கீழ், இஸ்ரவேல் 3000 வீரர்களைக் கொண்ட நல்ல பயிற்சிப் பெற்ற இராணுவத்தைப் பெற்றது (1 சாமுவேல் 13:1-2).
அச்சுறுத்தும் ராணுவம்:
பெலிஸ்திய படையில் முப்பதினாயிரம் இரதங்களும் ஆறாயிரம் குதிரை வீரர்களும் இருந்தன (1 சாமுவேல் 13:5).
தொழில்நுட்பம்:
நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பெலிஸ்தியர்கள் மிகவும் தந்திரமாக இருந்தனர். அவர்கள் இரதங்களைப் பயன்படுத்தினர் மற்றும் வாள் மற்றும் ஈட்டிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். இஸ்ரவேலர்களோ அத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை, மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்களை மட்டுமே ஆயுதங்களாகப் பயன்படுத்தினர். அரச குடும்பத்தின் கைகளில் இரண்டு வாள்கள் மட்டுமே உள்ளன; அது சவுல் மற்றும் யோனத்தான் (1 சாமுவேல் 13:19-23 ). "எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை" (1 சாமுவேல் 13:19).
யோனாத்தானின் விசுவாசம்:
யோனாத்தான், பெலிஸ்தரின் தாணையம் அமைந்திருந்த மறுபக்கத்திற்குச் செல்ல தன்னுடன் வருமாறு தனது ஆயுததாரியை அழைக்கிறான். யோனாத்தான் சிறந்த விசுவாச அறிக்கைகளுடன் அவனை ஊக்குவிக்கிறான். முதலாவதாக, இஸ்ரவேல் தேசம் என்பது உடன்படிக்கையின் மக்கள், தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் மற்றும் நேசத்திற்குரியவர்கள். பெலிஸ்தர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குபவர்களாக இருந்தனர். இரண்டாவதாக, தேவன் சிலரையோ அல்லது பலரையோ கொண்டு வெற்றியைக் கொடுக்க முடியும். தேவனுக்கு ஒரு நபர் கூட பெரும்பான்மை தான். தேவனுக்கு தேவையெல்லாம் அவரின் நோக்கத்தை நிறைவேற்ற தேவை ஒரு உண்மையுள்ள ஆணோ பெண்ணோ மட்டுமே. மூன்றாவதாக, கர்த்தர் நமக்காக கிரியைச் செய்வார் என்று யோனத்தான் கூறினான். ஆம், அவர்கள் இருவராக இருந்தாலும், தேவன் அவர்களுக்கு முன்னால் சென்று அற்புதமான வெற்றியைத் தருவார்.
யோனாத்தானின் வெற்றி:
யோனாத்தானும் அவனுடைய ஆயுததாரியும் பெலிஸ்தியர்களைத் தாக்கினார்கள். அவர்கள் விழுந்தார்கள். அவர்களில் இருபது பேர் உடனடியாக விழுந்தனர். அங்கிருந்த ஜனங்களுக்குள் ஒரு பீதி நிலவியது. அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பெலிஸ்தர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் தாக்கினர். இஸ்ரவேலிடம் வாள் இல்லை; தேவனோ அவர்கள் ஒருவரையொருவர் கொல்ல அவர்களின் ஆயுதங்களையேப் பயன்படுத்தினார்.
சவுலின் தோல்வி:
தேவன் உண்மையற்ற சவுலைப் பயன்படுத்தவில்லை, ஆனால் அவனுடைய மகன் யோனத்தானைப் பயன்படுத்தினார். மற்றொரு சூழலில், கோலியாத்தை தோற்கடிக்க தேவன் தாவீதைப் பயன்படுத்தினார் (1 சாமுவேல் 17).
யோனத்தானைப் போல எனக்குள் ஒரு திடமான விசுவாசம் இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்