1,000 க்கும் மேற்பட்ட மக்கள், தங்களை நாய்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பெர்லின் போட்ஸ்டேமர் ரயில் நிலையத்தில் கூடியிருந்து ஊழையிடுதல், குரைத்தல் மூலம் மட்டுமே தங்களுக்குள் தொடர்புகொண்டு தங்களை கோரைகளாக (விலங்கின் வாய் முன்பகுதியிலுள்ள நான்கு கூர்மையான பற்களில் ஒன்று; கோரைப்பல்) அங்கீகரிக்கப்பட விரும்பினர். அந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவியது. ஜப்பானின் டோகோ ஒரு “ஹைப்பர் ரியலிஸ்டிக் சூட்டை” (மிக யதார்த்தமான உடைகள்) ($14000) உருவாக்கி, தன்னை ஒரு நாயாக அடையாளப்படுத்திக் கொண்டு, மற்ற உயிரினங்களாக அடையாளம் காணும் மற்ற 'தேரியன்களுடன்' தொடர்பு கொள்ள விரும்பியதால் இது நடந்தது. (தேரியன் என்பதற்கு - ஓநாய், துருவ கரடி, அல்லது மண்புழு போன்ற மனிதநேயமற்ற உயிரினமாக தன்னை முழுமையாக அடையாளம் காணும் நபர் என்று அர்த்தம்)
உளவியலாளர்கள், ஒரு சிலர், தங்கள் மனித உடலில் வெவ்வேறு உயிரினங்களின் ஆன்மாவை வைத்திருப்பதாக உண்மையாக நம்புகிறார்கள் என்று கூறுகின்றனர். (மணி கன்ட்ரோல் செய்திகள் 21, செப்டம்பர் 2023)
நேபுகாத்நேச்சார் தண்டிக்கப்பட்டார்: தானியல் மூலம் தனக்குத் தெரிந்த தேவனைப் பொருட்படுத்தாமல், நன்றியின்மையால் தன்னை உயர்த்திக் கொண்டதற்காக நேபுகாத்நேச்சரை கர்த்தர் தண்டித்தார். (தானியேல் 4:31-32) ஏழு வருடங்களாக அவன் புல்லைத் தின்று வயல்வெளியில் வாழும் மிருகத்தைப் போல இருந்தார். அது அவருடைய விருப்பம் அல்ல, ஆனால் தேவனின் நியாயத்தீர்ப்பு.
சிருஷ்டிப்பு: தேவன் தமது வார்த்தையால் விலங்குகளைப் படைத்தார். (ஆதியாகமம் 1:24) விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன போன்ற மனிதமற்ற உயிரினங்கள் அனைத்தும் தேவனின் கட்டளையால் தோன்றின.
தேவனின் சாயல்: ஆதாம் தேவ சாயலில் படைக்கப்பட்டான், ஏவாளும் அப்படித்தான். (ஆதியாகமம் 1:26-27) மனிதர்கள் தேவனின் படைப்பு மட்டுமல்ல, சிறப்பும் தனித்துவமானவர்களும் கூட. முதலில், அவர்கள் ஆவிக்குறியவர்கள், அவர்கள் தேவனுடன் இணைந்திருக்கவும், தொடர்பு கொள்ளவும், ஐக்கியம் கொள்ளவும் முடியும். இரண்டாவதாக, அவர்கள் பகுத்தறிவு படைத்தவர்கள், சிந்திக்க, பகுத்தறிய மற்றும் நினைவில் கொள்ளும் திறன் கொண்டவர்கள். மூன்றாவதாக, அவர்கள் குற்றமற்றவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் படைக்கப்பட்டதால், அவர்கள் ஒழுக்கமானவர்கள். தேவன் பரிசுத்தமாக இருப்பது போல் அவர்களும் பரிசுத்தமாக இருக்க ஆசைப்பட வேண்டும். நான்கு, மனிதர்கள் சமூக உணர்வுள்ளவர்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பான உறவு வைத்திருக்க முடியும். ஐந்து, மனிதர்கள் தேர்வுசெய்யும் திறன் படைத்தவர்கள், அவர்கள் விருப்பங்களையும் தேர்வுகளையும் செய்யலாம். இதற்கு நேர்மாறாக, விலங்குகள் பொதுவாக குறிப்பிட்ட வெளிப்புற தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யப்படுகிறது. அவர்கள் சத்தியத்தை பொய்யாக மாற்றும்போது, இந்த சீரழிவு ஏற்படுகிறது.
சிருஷ்டிப்பின் கிரீடம்: மனிதர்கள் முழு சிருஷ்டிப்பின் கிரீடம். (சங்கீதம் 8:5) ஒரு நபர் தேவனால் கொடுக்கப்பட்ட இந்த மனித கொடையை நிராகரித்து, ஒரு மிருகமாகத் தேர்ந்தெடுக்கும்போது, அது ஆவிக்குறிய மற்றும் தார்மீக சீரழிவு. சிலருக்கு இது ஒரு வேடிக்கையான விஷயமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு முட்டாள்தனமான விஷயம்.
மனித கண்ணியம்: தேவன் மனிதனுக்கு அளித்த கண்ணியம் மற்றும் உரிமைகள் அத்தகைய முட்டாள்களால் தேவையில்லாமல் நிராகரிக்கப்படுகின்றன. இது கர்த்தருக்கு எதிரான வெறுக்கத்தக்க கலகம்.
ஒரு மனிதனாக, நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்