எபிரெயர் 4:13 அவருடைய (கர்த்தருடைய) பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
1. பேசுகின்ற வார்த்தைக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 12:31-37 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் யோபு 35:13 எபேசியர் 5:6; 1தீமோத்தேயு 6:20; 2தீமோத்தேயு 2:16 தானியேல் 3:29
2. பெறுகின்ற கடனுக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 18:21-35 பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. எஜமானிடம் பெற்ற கடனை மன்னித்தார். ஆனால் அவனிடம் கடனைப் பெற்ற கடனை மன்னிக்காமல் கழுத்தை நெறித்தான்;
3. தருகின்ற பொறுப்புக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
மத்தேயு 25:14-30 பரலோகராஜ்யம் புறதேசத்துக்குப் பிரயாண மாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. (தாலந்து கதை)
4. செய்கின்ற செயலுக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
2கொரிந்தியர் 5:10 சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக் காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
மத்தேயு 25:31-46 மனுஷகுமாரன் மகிமைப் பொருந்தினவராய் சிங்காச னத்தில் வீற்றிருப்பார்; அப்பொழுது வலப்பக்கத்திலும் இடப்பக்கத் திலும் நிறுத்துவார்
5. வாழ்கின்ற வாழ்க்கைக்கு கணக்குக் கொடுக்கவேண்டும்
பிரசங்கி 11:9; 12:14 இளைஞனே (மனிதனே) உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் இளமைபருவத்திலே உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;ஆனாலும் இவையெல்லாவற்றினிமித் தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி... அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்
Author: Rev. M. Arul Doss