நாம் இந்த உலகில் வாழும் வரை, சாத்தானுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். நம் சொந்த மாமிசம், ஆசைகள், விருப்பங்கள், உலகம், சூழ்நிலை, நண்பர்கள், உறவினர்கள், ஊடகம் என இன்னும் இது போன்ற அனைத்து கருவிகளையும் அவன் தந்திரமாக நமக்கு எதிராக பயன்படுத்துகிறான். இருப்பினும், அவனுக்கு எதிராக போராட மற்றும் மேற்கொள்ள வேண்டிய திறவுகோல்கள் என்னவோ இதுதான்.. அதாவது
முதலாவதாக, ஆட்டுக்குட்டியின் இரத்தம்:
சாத்தானின் தந்திரம் ஒரு சீஷனை குற்ற மனசாட்சியாக்குவது ஆகும். பல சமயங்களில், மன்னிக்கப்பட்டு விட்டோம் என்ற உத்தரவாதம் இல்லாமல், விசுவாசிகள் குற்ற மனசாட்சியில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுவதால் நீதிமான்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்வது மிக அவசியம் (எபேசியர் 1: 7; கொலோசெயர் 1:14; எபிரெயர் 9:14). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்பது ஒரு மூடநம்பிக்கையான சக்தியாகவோ அல்லது மந்திர மயக்கமாகவோ அல்லது இயேசுவின் உண்மையாகவே உடலில் உள்ள இரத்தம் என கருதப்படக்கூடாது. இரத்தம் என்பது நீதியுள்ள பிதாவிடமிருந்து தன் மீது மரண தண்டனையை ஏற்றுக் கொண்ட மற்றும் நம் சார்பாக மரித்த வரலாற்று நாயகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசுகிறது. இரத்தம் என்றால் பஸ்கா ஆட்டுக்குட்டியைப் போல ஆண்டவராகிய இயேசுவின் வாழ்க்கை மாற்றப்பட்டது. இயேசுவின் இரத்தம் குற்ற மனசாட்சியை குணப்படுத்துகிறது. "நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" (எபிரெயர் 9:14). இயேசுவின் இரத்தம் ஒரு மந்திரம் அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மீதான விசுவாசம்.
இரண்டாவதாக, சாட்சியின் வார்த்தை:
விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள். அவரே வழி, சத்தியம் மற்றும் ஜீவன். மேலும் பரிசுத்த ஆவியானவர் வரும்போது விசுவாசிகள் பெலனடைந்து, தேசம் முழுமைக்கும் சாட்சிகளாக இருக்கின்றனர் (அப்போஸ்தலர் 1: 8). கர்த்தருக்கு வலுவான, தைரியமான சாட்சிகளாக மாறுகின்றனர்.
மூன்றாவதாக, அவர்கள் தங்கள் ஜீவனை நேசிக்கவில்லை:
விசுவாசிகள் தங்கள் ஜீவனை நேசிக்காதபோது, அவர்கள் சாத்தானின் தாக்குதல் அல்லது கொடுமையை மேற்கொள்கிறார்கள். சீஷர்கள் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாதபோது அல்லது பற்றுதல் இல்லாதபோது சாத்தானின் தாக்குதல்கள் அர்த்தமற்றவையாகின்றது. "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" (பிலிப்பியர் 1:21). விசுவாசிகளைப் பொறுத்தவரை, தன் ஜீவனை உயர்வாக எண்ணுவது என்பது மதிப்புக்குரியது அல்ல, ஆனால் தேவன் மீதான அன்பினால் தன்னையே ஜீவ பலியாக கொடுப்பது உயர்வானது. சில தத்துவங்கள் போதிப்பது போல நம் சரீரம் பயனற்றதாக கருதப்படுவதில்லை, ஆனால் அதற்கு பதிலாக நம் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் நீதியின் ஆயுதங்களாகவும் அர்ப்பணிப்பது என்பது மகத்துவமானது (I கொரிந்தியர் 3:16; ரோமர் 6:13).
நான் பாவம், உலகம் மற்றும் சாத்தானை மேற்கொள்ளும் நபரா?
Author : Rev. Dr. J. N. Manokaran