வணிகத்தில் ஒப்பந்த சேவை அமர்த்தம் (outsourcing) என்பது உலகில் மிகவும் பொதுவானது. வீட்டில் அல்லது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பாரம்பரியமாக செய்யக்கூடிய அல்லது பாரம்பரியமாக செய்யக்கூடியவை செய்யப்படவில்லை, மாறாக சேவைகளைப் பெறுதல் அல்லது வெளியில் இருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளுதல் நடக்கும். உதாரணமாக, வீட்டில் சமைப்பதற்கு பதிலாக, வெளியில் இருந்து உணவு வாங்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகப் போக்கு சபைகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
1) அருட்பணி:
தேவனின் மிகப் பெரியக் கட்டளையை மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடிக்கும் அமைப்புகள் உள்ளன (மத்தேயு 28:18-20). அவர்கள், ஆர்வத்தில் ஒரு சொல்லாக்கத்தை உருவாக்கினர்: "போ அல்லது அனுப்பு." நல்ல அர்த்தமுள்ள அறிக்கை தான், ஆனால் அது ஒரு சாக்குபோக்காக மாறியது, ஊழியத்திற்கு போகாமல் பணத்தை மட்டுமாவது அனுப்பலாம் என்பதாக ஒரு யோசனையைப் பெறத் தொடங்கினர்.
2) ஜெபம்:
மீண்டும் பிறந்திருப்பதாக கூறினாலும், தனக்கு எப்படி ஜெபிப்பது என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறினார். தேவ ஜனங்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, ஜெபக் குறிப்புகளைப் பெற்று ஜெப வல்லுநர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் ஜெபிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு மேலான வல்லமை இருப்பது போலவும் அவர்கள் தேவனோடு நெருங்கி இருப்பது போல ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றனர். எனவே, அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்: "ஜெபக் கோரிக்கைகளை அனுப்புங்கள், நாங்கள் ஜெபிப்போம்." நிச்சயமாக, நிதியுடன் வரும் கோரிக்கைகள் சிறந்த கவனத்தையும் ஈர்ப்பையும் பெறுகின்றன என்பதில் சந்தேகமும் இல்லை.
3) ஆராதனை:
"பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்" (சங்கீதம் 100:1) என ஜனங்கள் அனைவரையும் பாட வேதாகமம் அழைக்கிறது. அதில் பாடத் தெரிந்தவர்கள் அல்லது பாடத் தெரியாதவர்கள், இசை ஞானம் உள்ளவர்கள், தாள ஞானம் உள்ளவர்கள் என அனைவரும் கர்த்தரை கெம்பீரமாய் பாடுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். பல உள்ளூர் சபைகளில், ஜனங்களின் கைத்தாளங்களோடு சபைகளுக்கான பாடலைக் காணவில்லை, சிறப்பு இசையுடன் கூடிய, தனித்துவமான குழுக்களால் பிரபலமான பாடல்கள் மட்டுமே நேர்த்தியுடன் மற்றும் கவர்ந்திழுக்கும் வகையிலும் பாடப்படுகின்றன.
4) வருகை:
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொற்றுநோய் பரவல் மற்றொரு சங்கடத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான சபைகள் ஆன்லைன் சேவைகளை ஆரம்பித்துள்ளன. மக்கள் சோம்பேறித்தனமாக தங்கள் மொபைல் அல்லது அதற்கான சாதனங்களை திறந்து வைத்து லைக் பட்டனை அழுத்தவும் அல்லது அற்புதம் அல்லது நன்றாக இருந்தது என்பது போன்ற கமென்ட்களை பதிவிடுகின்றனர். அதுமாத்திரமல்ல, அவர்கள் ஆராதனை அல்லது வேதாகம ஆராய்ச்சி அல்லது உபவாச ஜெபத்தில் கலந்து (ஆஜர்) கொண்டதாக எண்ணம் உருவாக்கப்படுகிறது. விசுவாசிகளின் வருகை பதிவேடு போதகர்களை மகிழ்விக்கும், ஆனால் தேவனையல்ல.
நம் ஆவி, ஆத்மா, சரீரம் என தேவனைச்சார்ந்த ஆராதனைகள், ஜெபங்கள், தியான வார்த்தைகள் மற்றும் அருட்பணிகள் என அனைத்து அம்சங்களிலும் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
ஆவிக்குரிய வாழ்க்கையை வெளிப்புறத்திலிருந்து அல்லது வேறு எவரோ ஒருவரிடமிருந்து பெறுகிறேனா? அதைக் குறித்து எனக்கு குற்றவுணர்வு உளளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்