சுவிசேஷத்தின் எளிய பிரசங்கம் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் எபேசு பட்டணத்தில் வல்லமையான எதிர் நீரோட்டங்களை உருவாக்கியது.
1) திறன்னு மன்றம்:
திறன்னு மன்றத்தில் பவுல் இரண்டு வருடம் பிரசங்கித்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பவுல் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள ஓய்வு நேரத்தை தனது பிரசங்கத்திற்காக தேர்வு செய்தார். தினமும் ஐந்து மணி நேரம் என்பது 500 முதல் 600 நாட்களாக இருக்கலாம். மொத்த நேரம் 2500 முதல் 3000 மணி நேரம் என கணக்கிடப்படுகிறது.
2) ஆவிக்குரிய தாக்கம்:
சிறிய ஆசியா முழு பகுதியும் நற்செய்தியைக் கேட்டது. ஆவிக்குரிய தாக்கம் என்னவென்றால், மக்கள் கையால் செய்யப்பட்ட கடவுள்களை நிராகரித்து, உண்மையான கடவுளைத் தேடினார்கள். ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புள்ள சூனியம் மற்றும் மந்திரக் கூறுகளை எரித்ததன் மூலம் தவறான வழிபாடு/ஆன்மீகம் கைவிடப்பட்டது.
3) பொருளாதார பாதிப்பு:
"தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக் கொண்டிருந்தான்" (அப்போஸ்தலர் 19:24). இது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விற்பனை குறைந்துள்ளது. மேலும் லாபமின்றி நஷ்டமும் ஏற்பட்டது.
4) சதி:
தெமேத்திரியு தன்னைப் போன்ற வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பிறரைக் கூட்டி சதி செய்தான். அவனின் சுயநலம் மத நலன்களாகவும், கோவிலின் மகத்துவத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேசிய நலன் அல்லது நகர நலனாகவும் முன்னிறுத்தப்பட்டது.
5) கும்பலின் தூண்டுதல்:
அனைவரும் இணைந்து ஒரு ஈர்க்கும்படியான முழக்கத்தை உருவாக்கி, பரபரப்பான இடங்களான சந்தை அல்லது ஆலயப் பகுதியில் நின்று கூச்சலிட்டனர்; "எபேசியருடைய தியானாளே பெரியவள்" (அப்போஸ்தலர் 19:28). முழக்கங்களைக் கேட்டு கூட்டம் கூடியது. "கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது" (அப்போஸ்தலர் 19:32).
6) முழக்கங்கள்:
அரங்கத்திற்குள் இருந்த கும்பல் இரண்டு மணி நேரம் பேச முயன்றவர்களை அனுமதிக்காமல் கோஷங்களை எழுப்பியது; சத்தமிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
7) அறிவார்ந்த சம்பிரதியானவன்:
பட்டணத்து சம்பிரதியானவன் புத்திசாலித்தனமாகப் பேசினான்: முதலாவதாக, நகரத்தில் சில நம்பிக்கைகள் மறுக்க முடியாதவை. இரண்டாவதாக, அவசரப்பட வேண்டாம், அமைதியாக இருங்கள். மூன்றாவதாக, இந்த மனிதர்கள் நம் தெய்வத்தை நிந்தனை செய்பவர்களோ அல்லது தூஷிபபவர்களோ அல்ல. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நான்காவதாக, வைக்கப்பட்ட குறைகள் குறிப்பிட்ட கட்டணங்களுடன் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும். ஐந்தாவதாக, விசாரிக்க நியாயதிபதிகள் அல்லது தேசாதிபதிகள் உள்ளனர், அவர்கள் விசாரித்து நீதி வழங்குவார்கள். ஆறாவதாக, தூண்டியவர் மற்றும் கும்பல் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படலாம். ஏழாவதாக, அவர் கூட்டத்தை கலைத்தார் (அப்போஸ்தலர் 19:35-42).
அதிகாரத்தில் இருப்பவர்கள் எபேசின் மேயரைப் (சம்பிரதியானவன்) போல ஞானமுள்ளவர்களாக இருக்க நான் ஜெபிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன