1. விட்டால், விட்டுவிடுவார்
2நாளாகமம் 15:2 நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டடீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்
1நாளாகமம் 28:9 நீ அவரை விட்டுவிட்டால்... கைவிடுவார்
2நாளாகமம் 24:20 நீங்கள் விட்டுவிட்டதினால்... கைவிடுவார்.
2. கெடுத்தால், கெடுப்பார்
1கொரிந்தியர் 3:17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக் கிறது; நீங்களே அந்த ஆலயம்.
வெளிப். 11:18 கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது
லூக்கா 9:25 தன்னைத்தான் கெடுத்துக்கொண்டால் லாபம் என்ன?
3. மறுதலித்தால், மறுதலிப்பார்
2தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
மத்தேயு 10:33 என்னை மறுதலிக்கிறவனை நானும் மறுதலிப்பேன்
லூக்கா 12:9 மனுஷர் முன்பாக மறுதலித்தால் தேவதூதர் முன்...
1யோவான் 2:22,23 மறுதலிக்கிறவன் பொய்யன், அந்திகிறிஸ்து
வெளிப். 3:8 பிலதெல்பியா சபையே உன் கிரியை அறிந்திருக்கிறேன்; உனக்குகொஞ்சம் பென் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
மத்தேயு 26: 34-75 பேதுரு
4. மன்னியாதிருந்தால், மன்னியாதிருப்பார்
மத்தேயு 6:15; மாற்கு 11:26 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை யும் மன்னியாதிருப்பார்
மத்தேயு 18:35 தன்தன் சகோதரன் தப்பிதங்களை மன்னியாமற்...
யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கி...
மத்தேயு 6:14,15; எபேசியர் 4:32; கொலோசெயர் 3:13 மன்னியுங்கள்
Author: Rev. M. Arul Doss