ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரை விட வெண்கலப் பதக்கம் வென்றவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். தர்க்க ரீதியாக சிந்திக்க வேண்டுமெனில், வெண்கலப் பதக்கத்தை விட வெள்ளிப் பதக்கம் சிறந்தது. ஆனாலும், வெள்ளிப் பதக்கம் வென்றவர் மகிழ்ச்சி குறைந்தவராக காணப்படுகிறார். பொதுவாகவே வெற்றியைக் கொண்டாடுவது மனித இயல்பு. எனவே, அரையிறுதியில் தோற்று வெள்ளிப் பதக்கம் பெறும் அணிகள் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் வேறே அரையிறுதியில் வெண்கலப் பதக்கம் கிடைத்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் தங்களை தோல்வியுற்றவர்களாகக் கருதினர். ஆக, இந்த நிகழ்வு நேர்வெதிர்க் கூற்று என்று அழைக்கப்படுகிறது.
மனிதர்களை ஏமாற்றுவதற்கு சாத்தான் இந்தக் கூற்றை தான் தனது வலையாகப் பயன்படுத்துகிறான். ஏதேன் தோட்டத்தில், சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் தோல்வியுற்றவர்களாக சித்தரித்தான். ஆம், அவர்கள் மனிதர்களாக இல்லாமல் தேவர்களைப் போல இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கு நல்லது கெட்டது பற்றிய அறிவு அல்லது நல்லது கெட்டது என்ன என்பதை அறிவிக்கும் வல்லமை இருக்க வேண்டும் (ஆதியாகமம் 3:1-7) என்பதாக ஆதாம் மற்றும் ஏவாளின் மனதில் சாத்தானால் உருவாக்கப்பட்ட இந்த கற்பனையான அதிருப்தி (எதிர்மறையான சிந்தனை) அவர்களிடம் வேலை செய்தது. தாங்கள் உயரத்திற்கு போக வேண்டும் என்று நினைத்தார்கள், மேலும் தேவன் தங்களை ராஜாவாக அல்லது பூமியின் மீது ஆட்சி செய்யும் ஆட்சியாளராக வைத்ததை மறந்துவிட்டார்கள் (ஆதியாகமம் 1:28). இப்போது, எது நல்லது எது தீயது என்பதை அதிகாரமாக குறிப்பிடவும், கடவுளைப் போல ஆகவும் அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டபோது, ஞானமாக இருக்கும்படி அவர்களின் கண்கள் திறக்கவில்லை, ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருப்பதைக் கண்டார்கள்.
ஒரு பாவி, தனக்காக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் முடித்த பணியை விசுவாசித்து அவரிடம் வரும்போது, அந்நபர் மன்னிக்கப்பட்டு, நீதியுள்ளவனாக அறிவிக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளையாகி, தேவ குடும்பத்தில் ஐக்கியமாகி நித்திய ஜீவனைப் பெறுகிறான் (யோவான் 1:12; ரோமர் 8:15). எனினும், சாத்தான் செல்வம், அந்தஸ்து மற்றும் சூதுவாது நிறைந்த ஞானம் என உலகின் அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு விசுவாசிகளின் கவனத்தைத் திருப்புகிறான். மக்கள் செழிப்பு, அதிகாரம், உடைமை, பெருமை (கலாச்சாரம், ஜாதி, இனம், அழகியமுகம், காருணியம்) மற்றும் கௌரவம் ஆகியவற்றைப் பெற எளிய நற்செய்தியை நிராகரிக்கிறார்கள், இது தங்களை தேவர்களாக ஏமாற்ற உதவுகிறது. தாங்கள் நிர்ப்பாக்கியமுள்ளவர்கள், பரிதபிக்கப்படத்தக்கவர்கள், தரித்திரர்கள், குருடர்கள் மற்றும் நிர்வாணியுமாயிருக்கிறதை அவர்கள் உணரவில்லை (வெளிப்படுத்துதல் 3:17).
ஆதாம் மற்றும் ஏவாளால் மனிதகுலம் அதன் பெருமை, மரியாதை மற்றும் கண்ணியத்தை இழந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் அனைத்தையும் மீட்டெடுத்தார். தேவ வார்த்தைக்கு முரணான தவறான எண்ணங்களால் சாத்தான் நம்மை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாயிருப்போம்.
தேவ கிருபைக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்