யாத்திராகமம் 14:13,14 மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள். 1சாமுவேல் 17:47; 2நாளாகமம் 20:15; உபாகமம் 3:22; யோசுவா 23:3,10; நெகேமியா 4:20; யாத்திராகமம்15:3(1-21); யோசுவா 10:14,42; சங்கீதம் 24:8
1. யுத்தம்பண்ணுகிறவர்கள் ஓடிபோவார்கள்
உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
சங்கீதம் 68:1 தேவன் எழுந்தருள்வார், இவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள்... ஓடிப்போவார்கள்.
2. யுத்தம்பண்ணுகிறவர்கள் இல்பொருளாவார்கள்
ஏசாயா 41:11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலட்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். (இல்லாதொழிவர்)
ஏசாயா 41:12 உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
3. யுத்தம்பண்ணுகிறவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள்
எரேமியா 1:19; 15:20 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணு வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;
ஏசாயா 42:13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்த வீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கி தம்முடைய சத்துருக்களை மேற்கொள்வார்
எரேமியா 20:11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்.
Author: Rev. M. Arul Doss