யோசுவா 23:3-10

23:3 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
23:4 பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.
23:5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.
23:6 ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.
23:7 உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.
23:8 இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
23:9 கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
23:10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.




Related Topics



கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்-Rev. M. ARUL DOSS

யாத்திராகமம் 14:13,14 மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள்...
Read More



உங்கள் , தேவனாகிய , கர்த்தர் , உங்களுக்கு , முன்பாக , இந்தச் , சகல , ஜாதிகளுக்கும் , செய்த , யாவையும் , நீங்கள் , கண்டீர்கள்; , உங்கள் , தேவனாகிய , கர்த்தர் , தாமே , உங்களுக்காக , யுத்தம்பண்ணினார் , யோசுவா 23:3 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 23 TAMIL BIBLE , யோசுவா 23 IN TAMIL , யோசுவா 23 3 IN TAMIL , யோசுவா 23 3 IN TAMIL BIBLE , யோசுவா 23 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 23 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 23 TAMIL BIBLE , JOSHUA 23 IN TAMIL , JOSHUA 23 3 IN TAMIL , JOSHUA 23 3 IN TAMIL BIBLE . JOSHUA 23 IN ENGLISH ,