நம்மைத் திருப்தியாக்குகிற கர்த்தர்

ஏசாயா 58:11 கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்

1. நன்மையினால் திருப்தியாக்குகிற கர்த்தர்
எரேமியா 31:14 ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவை களினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையால் திருப்தியாவார்கள்
சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார் 
சங்கீதம் 104:28 சமுத்திர ஜீவன்கள் நன்மையால் திருப்தியாகும்
சங்கீதம் 107:8 தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்கி...
சங்கீதம் 65:4 உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

2. அப்பத்தினால் திருப்தியாக்குகிற கர்த்தர்
சங்கீதம் 132:15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்
சங்கீதம் 22:26 சிறுமைப்பட்டவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்
நீதிமொழிகள் 12:11,14 ஆகாரத்தினால், வாயின் பலனால் திருப்தியடை வான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்
சங்கீதம் 81:16 கன்மலையின் தேனினால் திருப்தியாக்குவேன்.
சங்கீதம் 147:14 உசிதமான கோதுமையினால் திருப்தியாக்குகிறார்
மத்தேயு 5:6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்
மத்தேயு 14:20 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.

3. கிருபையினால் திருப்தியாக்குகிற கர்த்தர்
சங்கீதம் 90:14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும் படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்
சங்கீதம் 17:15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
சங்கீதம் 36:7,8 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது; உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download