பர்னபா முதல் நூற்றாண்டு சபையின் பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் கொண்ட ஒரு முக்கியமான சபைத் தலைவர்.
1) தாராள நன்கொடையாளன்:
பர்னபா தனது நிலத்தை விற்று எருசலேமில் உள்ள சபைக்கு நன்கொடையாக வழங்கினார் (அப்போஸ்தலர் 4:36-37).
2) தாராளகுணம்:
கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகச் செல்லும் வழியில் தமஸ்கு சாலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சவுல் சந்தித்தார். சவுலுக்கு இருந்த அவப்பெயர் காரணமாக, அனைவராலும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார். இருப்பினும், பர்னபா சவுலிடம் தாராள குணத்துடன் இருந்தார் மற்றும் அப்போஸ்தலர் உட்பட மற்ற சீஷர்களை சந்திக்க அவனை அவர்களிடத்தில் அழைத்து வந்தார் (அப்போஸ்தலர் 9:26-28).
3) தாராளமான அணுகல்:
பர்னபா எருசலேமிலிருந்து அந்தியோகியாவில் உள்ள சபைக்கு அனுப்பப்பட்டார். அவன் அங்குள்ள சீஷர்களுக்கு சத்தியத்தைக் கற்பித்தார், அப்போது அவனுக்கு மேலும் உதவிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக உணர்ந்தவுடன் பர்னபா தர்சுவுக்கு சென்று சவுலை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தார் (அப்போஸ்தலர் 11:25). பவுலின் வாழ்க்கையில் தேவ அழைப்பை பர்னபாவால் புரிந்து கொள்ள முடிந்தது, பர்னபா ஒரு போதகராக இருந்ததால், அவருடைய ஊழியத்திற்கான கதவுகளைத் திறந்து கொடுத்தார்.
4) தாராளமான உதாரணத்துவம்:
அகபு என்னும் தீர்க்கதரிசி பஞ்சத்தை முன்னறிவித்தபோது, "அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்". பர்னபா நிதி திரட்டுவதிலும், அந்த நிதியை எருசலேமுக்கு எடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டார் (அப்போஸ்தலர் 11:28-30).
5) தாராள மனம்:
அந்தியோகியா சபையின் தலைவர்கள் பர்னபாவையும் பவுலையும் மிஷனரிகளாக நியமித்தனர். ஆரம்பத்தில் பர்னபா மற்றும் பவுல் என எழுதும் லூக்கா, பின்னர் அதை பவுல் மற்றும் அவனைச் சார்ந்தவர்களும் என்று எழுதுகிறார் (அப்போஸ்தலர் 13:13). ஒருவேளை, பர்னபா மருமகன் மாற்கு என்னும் மறுபெயர் கொண்ட யோவானின் தலைமை மாற்றத்தால் வருத்தமடைந்து அணியை விட்டு வெளியேறியிருக்கலாம்.
6) தாராள அணுகுமுறை:
பர்னபா புறஜாதிகளிடம் சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். எனவே, புறஜாதி பின்னணியில் இருந்து வந்த புதிய மதம் மாறியவர்களுக்கு கற்பிப்பதற்காக அவர் எருசலேம் சபையிலிருந்து அந்தியோகியாவுக்கு நியமிக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 13:1-2).
7) தாராள உணர்வு:
மிஷனரி பயணம் திட்டமிடப்பட்டபோது, மாற்கு யோவானை அந்த பயணத்திற்கு அழைத்துச் செல்வது புத்திசாலித்தனம் என்று பவுல் நினைக்கவில்லை. இருப்பினும், மாற்கு யோவான் மீது பர்னபா மீட்பின் மனப்பான்மையைக் கொண்டிருந்தார், எனவே அந்த இளைஞனை அவர் கைவிடவில்லை (அப்போஸ்தலர் 15: 37-39). பர்னபா செய்தது சரியே; ஆம் பிற்காலத்தில் மாற்கு நற்செய்தியை எழுதினார் அல்லவா. பவுல் பர்னபாவை மறைமுகமாகப் பாராட்டுகிறார், எப்படியென்றால் தீமோத்தேயுவிற்கு எழுதும் கடிதத்தில் மாற்கு ஊழியத்தில் பிரயோஜனமானவன் என்று எழுதினாரே (2 தீமோத்தேயு 4:11).
நான் பர்னபாவைப் போல் பெருந்தன்மையுள்ளவனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்