ஏதோமியர் கண்டனத்திற்குரியவர்கள்

ஒரு கிறிஸ்தவ வாட்ஸ்அப் குழுவில், ஒருவர் இந்தியாவில் நடந்த கலவரங்களைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார். அடக்குமுறையாளர்களை புகழ்ந்தார்;  பாதிக்கப்பட்டவர்களை குற்றப்படுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, அவருக்கிருந்த வெறுப்பின் நிமித்தம் கண்மூடித்தனமாக இருந்தார், தேவ நீதியைப் பார்க்க முடியவில்லை.  இத்தகைய முட்டாள்தனமான மனப்பான்மைக்கு எதிராக வேதாகமம் எச்சரிக்கிறது. ஏதோமியர்கள் என்பவர்கள் ஏசாவின் வழித்தோன்றல்கள். ஏதோம் என்பது ஏசா தன்னுடைய பிறப்புரிமையை சிவப்பு கூழுக்காக யாக்கோபிற்கு விற்றதற்காக ஏசாவுக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் வழங்கப்பட்ட புனைப்பெயர் (ஆதியாகமம் 25:19-34). அவர்கள் சேயீர் மலைப்பகுதியில் குடியேறினர். இருப்பினும், அவர்கள் பேரழிவு மற்றும் துன்பத்தின் போது யாக்கோபின் சந்ததியினரிடம் இரக்கம் காட்டவில்லை (ஒபதியா 1: 10-14).  ஒபதியா தீர்க்கதரிசி அவர்களின் முட்டாள்தனமான பாவங்களை பட்டியலிடுகிறார், மேலும் தேவனுடைய தீர்ப்பையும் உச்சரிக்கிறார்.

1.  தூரத்தில் நிற்போர்:
ஒரு பேரிடரின்போது உதவி செய்ய விரைந்து செல்வதற்குப் பதிலாக, ஏதோமியர்கள் தூரத்தில் நின்றார்கள்.  இது நல்ல சமாரியன் உவமையில் எரிகோ சாலையில் மரணத் தருவாயில் இருக்கும் மனிதனுக்கு உதவ மறுத்த ஆசாரியனும் லேவியனும் போல இருந்தது.  எதுவும் செய்யாததும் அல்லது தவறவிடுதலும் பாவம்.  ஆம், "ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்" என்கிறது யாக்கோபு 4:17. 

2. உற்சாகமூட்டுபவர்கள்:
ஏதோமியர்கள் 
கொடுமை இழைப்பதில் இன்பம் காண்பவர்கள், அவர்கள் மற்றவர்களின் அசௌகரியத்தில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.  அவர்கள் இஸ்ரவேலின் துயரத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.  இன்னும் சொல்லப்போனால், அவர்கள் துன்புறுத்துபவர்களுக்கு உற்சாகமூட்டுபவர்களாக இருந்தனர். "உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக" (நீதிமொழிகள் 24:17). 

3. பெருமைக்குரிய பேச்சாளர்கள்:
ஏதோமியர்கள் இஸ்ரவேலின் உதவியற்ற நிலையைக் கண்டு மகிழ்ந்தனர். தாங்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும், துன்பத்தால் தொடப்படாதவர்கள் என்றும், பாதுகாப்பானவர்கள் என்றும், பேரிடர் அவர்களை ஒருபோதும் மேற்கொள்ளாது என்றும் அவர்கள் கருதினர். தவறான பாதுகாப்பு உணர்வு அவர்களை பெருமிதம் கொள்ளச் செய்தது.

4. அநுகூலமானவர்கள்:
ஏதோமியர்கள், கைகலப்பின் போது, ​​இஸ்ரவேலரை கொள்ளையடித்தனர் அல்லது திருடினர்.  அவர்கள் அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சில விரைவான வெற்றிகளைப் பெற்றனர்.  தங்களுக்குச் சொந்தமில்லாத பேராசையும் அத்தகைய பொருள் செல்வத்தை வைத்திருப்பதும் பாவமாகும்.

 5. கொலைக்காரர்கள்:
ஏதோமியர்கள் யுத்தத்தின்போது தப்பியோடியவர்களைக் கொன்றனர் அல்லது எதிரிகளிடம் ஒப்படைத்தனர்.  மோசேயின் பிரமாணம், "தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக" (உபாகமம் 23:15) என்கிறது.

துன்பத்தில் இருப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், சுரண்டப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோமாக.

துன்பப்படுபவர்களிடம் எனது அணுகுமுறை என்ன?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download