1. காணாமற்போனதைத் தேடிவந்தவர்
லூக்கா 15:4-7 காணாமற்போன ஆடு
லூக்கா 15:8-10 காணாமற்போன காசு
லூக்கா 15:11-32 காணாமற்போன இளையமகன்
எசேக்கியேல் 34:16(1-31) நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்.
சங்கீதம் 119:176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப் போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக.
மத்தேயு 10:6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
2. கெட்டுப்போனதைத் தேடிவந்தவர்
மத்தேயு 18:11,12 (11-14) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18:14 சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக் கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
யோவான் 10:28 அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.
3. இழந்துபோனதைத் தேடிவந்தவர்
லூக்கா 19:10 (1-10) இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
யோவான் 6:39(37-40) அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
மத்தேயு 16:25; மாற்கு 8:35; லூக்கா 17:33 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
Author: Rev. M. Arul Doss