கடைசி நாட்களில் மனிதகுலத்தின் சீரழிவு
இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு திருமணமான பெண் தனது கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு இளைஞனுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது. அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் தன் மீது அவளுக்கு எவ்வளவு அன்பிருக்கிறது என்பதை நிரூபிக்க கேட்டான். அது எப்படியெனில் முன்னாள் கணவன் மீதும் அவளின் மகனான 18 மாத குழந்தையின் மீது வெறுப்பைக் காட்டி தன் மீதான அன்பை வெளிப்படுத்தக் கோரினான். மேலும் அப்பெண்ணிடம் அவளது 18 மாத மகனை கொடூரமாக தாக்குமாறு அறிவுறுத்தினான். அப்பெண்ணும் அக்குழந்தையை ரத்தம் வழிய வழிய அடித்து அதை வீடியோ எடுத்து தனது காதலனுக்கு அனுப்பியுள்ளாள். சமூக ஊடகங்களில் (ஆகஸ்ட் 30, 2021) இது பரவலானது. அதில் யாரோ ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார், அதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடைசி நாட்களில், மக்கள் பொல்லாதவர்களாகி, அச்சமோ வருத்தமோ இல்லாமல் தீய செயல்களைச் செய்வார்கள் என்று பவுல் எழுதுகிறார். குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வை விவரிக்கும் சில காரணிகள் இங்கு உள்ளன.
1) சுயநலம்:
ஒரு தாயாக, தான் பெற்ற மகனுக்கான இயல்பான அன்பும் ஏக்கமும் அவள் கொண்டிருக்கவில்லை. இங்கே கள்ளக் காதல் தன் குழந்தையை விட விலை மதிப்புள்ளதாகி விட்டது என்பது எத்தனை கொடுமை. வேதாகமத்தில் சாலொமோன் ராஜா குழந்தையைக் கொல்ல உத்தரவிட்டபோது, உண்மையான தாய் குழந்தையை உயிருடன் வைத்திருக்க விரும்பினாள். தாயாக இருக்கும் பாக்கியத்தை அவள் இழக்க நேரிடலாம், ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதே அவசியம் என நினைத்தாள் (1 இராஜாக்கள் 3:16-28). ஆனால் இந்தச் செய்தியில், அந்தப் பெண் வெட்கமின்றி மனசாட்சியின்றி சுயநலமாக இருந்தாளே.
2) முறைகேடு:
அவள் தனது மகனை உடல்ரீதியாக துன்புறுத்தினாள். தன்னை காதலன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் தனது புதிய கடவுளான காதலனை மனங்குளிரப் பண்ணுவதற்காக அந்த நிகழ்வுகளையெல்லாம் படமாக்கினாள்.
3) இதயமற்ற நடத்தை:
இத்தகைய நடத்தை பெண்ணின் இதயம் கல் போன்றது, கடினமானது மற்றும் பிடிவாதமானது என்பதைக் காட்டுகிறது. வலியில் அழும் குழந்தையின் மீது ஒரு அனுதாபமோ இரக்கமோ அவளுக்கு வரவில்லை. மேலும் அக்குழந்தையின் வலியோ, கண்ணீரோ, கதறலோ, கசிந்த ரத்தமோ அப்பெண்ணின் இருதயத்தை அசைக்கவில்லை என்பது மிக கொடூரம்.
4) மிருகத்தனம்:
அது அவளின் சொந்தக் குழந்தை, அவளது சதை மற்றும் இரத்தம், இன்னும் சரியாக பேச்சு வராத ஒரு கைக்குழந்தையின் மீது கற்பனை செய்து கூட பார்க்க முடியாதளவு ஆத்திரத்தை வெளிப்படுத்தினாள். மேலும் அவளது கோபத்திற்கு அக்குழந்தை உதவியற்று அல்லது பரிதாபமாக பலியாக இருந்தது.
5) ஏற்றுக்கொள்ள முடியாதது:
பெண்ணிடம் நம்பிக்கை ஆதாரம் கோரிய அந்த ஆணை அவளால் சமாதானம் பண்ணவோ அமைதி படுத்தவோ முடியவில்லை. அந்த முட்டாள் பெண் மிகவும் கொடூரமானவளாகவும், இதயமற்றவளாகவும், துஷ்பிரயோகம் செய்பவளாகவும் இருப்பாள் என்றே அவன் எதிர்பார்த்தான்.
மனிதகுலத்தின் சீரழிவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
எல்லா தீங்குகளிலிருந்தும் தப்பிக்க நான் விழிப்புடன் இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran