மிகப் பெரிய அநீதியும் அநியாயமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நடைபெற்றது. கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்து இரக்கமின்றி அறையப்பட்டார். இப்படி ஒரு சம்பவம் பரதரப்பட்ட மக்கள் கூட்டத்தினரின் கண்கள் முன்பதாக அரங்கேறியது.
1) தூண்டிவிடப்பட்ட கூட்டம்:
பரிசேயர்களும் சதுசேயர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையும்படி மக்களைத் தூண்டினார்கள். தூண்டிவிடப்பட்ட மக்கள் தங்கள் தேச பக்தியை நிரூபிக்க கலகத்தின் அடையாளமாக இருந்த பரபாஸை விட்டுவிட கோரினர், ஆனால் அம்மக்கள் சமாதானத்தின் தேவனாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையத் தேர்ந்தெடுத்தனர். அந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர் தங்களின் தேசிய சேவையை குறித்து தங்களை தாங்களே வாழ்த்திக் கொண்டும் மற்றும் தங்களின் தேசியவாத தன்னலத்தை இந்நிகழ்வு தடவிக் கொடுத்தது போலவும் உணர்ந்தனர்.
2) அறிவுசார் கூட்டம்:
மோசே நியாயப்பிரமாணம், விளக்கங்கள், பயன்பாடுகள் மற்றும் குறிப்புரைகள் என அனைத்து வல்லுனர்களும் கல்விகூடம் செல்லாத போதகரை (ரபீ) அகற்றி (தூரமாக்கி) விட உறுதியோடு வந்திருந்தனர். கர்த்தராகிய இயேசுவின் போதனை பிரபலமாக இருந்தது, மேலும் அவர்கள் எல்லாரும் ஓரங்கட்டப்பட்டனர். ஆகவே பொறாமையின் காரணமாக அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய சதி செய்தனர் (மத்தேயு 27:18). அவர்கள் தேசத்தில் தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக கர்த்தராகிய இயேசு இருப்பதாக உணர்ந்தனர்.
3) அறியாத கூட்டம்:
தூண்டிவிடப்படாத மற்றவர்களும் அங்கிருந்தனர். அங்கு நடந்த கொடூரமான காட்சியை அவர்கள் கண்டனர். சிரேனே ஊராகிய சீமோனும் அவர்களில் ஒருவன். இந்தக் கூட்டம் வருத்தத்துடனும் உதவியற்றவர்களாகவும் அங்கு நடைபெற்ற காரியங்கள் எதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை எனினும் செய்வதறியாது நின்றனர்.
4) அலட்சியமான கூட்டம்:
எல்லா நிகழ்வுகளிலும் அலட்சியமாக இருந்த மற்றொரு கூட்டம் அங்கு இருந்தது. சிலுவையில் அறையப்படுவதற்காக நியமித்தவர்களை சிலுவை மீது தூக்கிப் போட்டு ஆணி அடிக்க வேண்டிய கொடுமையான மற்றும் ஒரு நன்றியற்ற வேலையை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்த வீரர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேசியாவாக இருப்பாரோ இல்லையோ என்பதைப் பற்றி கவலையே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, தன்னால் அப்படி நடத்தப்படுபவர் கண்டனத்துக்குரியவர், அவர் ஒரு பலியாள், அவ்வளவே.
5) ஈர்க்கப்பட்ட கூட்டம்:
கர்த்தராகிய இயேசுவை நேசித்து அவரைப் பின்தொடர்ந்த ஒரு சிறிய கூட்டம் அங்கு இருந்தது. அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் தாய் மரியாள், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவானும் ஆவார்கள் (யோவான் 19: 25-26). கர்த்தராகிய இயேசுவின் முழு துன்பத்தையும் மரணத்தையும் அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் அவரைப் பின்பற்றினார்கள். அவருடைய உயிர்த்தெழுதலின் சாட்சிகளாக அவர்கள் இருந்ததில் ஆச்சரியமும் இல்லை.
ஒருவேளை அன்று, நான் அந்த கூட்டத்தில் அங்கு இருந்திருந்தால், நான் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்?
Author: Rev. Dr. J. N. Manokaran