வேதாகமத்தில் திருச்சபைக்கு பல உருவகங்கள் உள்ளன:
கிறிஸ்துவின் சரீரம், கிறிஸ்துவின் மணவாட்டி, தேவனின் குடும்பம் மற்றும் தேவனின் ஆலயம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தலை மற்றும் சரீரம் என்பது அவருடைய சபை (1 கொரிந்தியர் 12:26-31; ரோமர் 12:5). விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, எலும்புக்கூடு அமைப்பு, நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட அமைப்பு, செரிமான அமைப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற பல அமைப்புகள் உடலில் உள்ளன.
எலும்புகள் மற்றும் தசைகள் - அப்போஸ்தலர்கள்:
போதனைகள், பயிற்சி, பயனியர் சேவை, விரிவுபடுத்துதல் மற்றும் புதிய பகுதிகளை ஆராய்வதன் மூலம் அப்போஸ்தலர்கள் சபையின் அடித்தளத்தை அமைத்தனர். எலும்புக்கூடு கட்டமைப்பைக் கொடுப்பது போல, அப்போஸ்தலர்கள் சபைக்கான கட்டமைப்பை வழங்குகிறார்கள். அப்போஸ்தலர்கள் தேவ தரிசனம், தேவ பரிசுத்தத்தின் தரிசனம் மற்றும் தேவ திட்டத்தின் தரிசனம் என தரிசனம் உடையவர்கள்.
நரம்பு மண்டலம் - தீர்க்கதரிசிகள்:
அவை தீர்க்கதரிசனக் குரல்கள், மக்களைப் பரிசுத்தத்தில் உறுதியாக நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது, ஆலோசனை அளிப்பது, கண்டிப்பது மற்றும் திருத்துவது என்றிருப்பார்கள். மேலும், அவர்கள் தேவனுடைய தராதரங்களையும், எதிர்பார்ப்புகளையும், நீதியையும் அறிவிக்கிறார்கள்; மேலும் அநீதியைக் கண்டித்து உணர்த்துகிறார்கள். யோவான் ஸ்நானகன் ஏரோதைக் கண்டித்தான் அல்லவா; அதுபோல நாத்தான் தாவீதை விபச்சாரத்திற்காகக் கண்டித்தான் (லூக்கா 3:19; 2 சாமுவேல் 12).
செரிமான அமைப்பு - சுவிசேஷகர்கள்:
சபை ஒரு பணிக்காக உள்ளது; ஒவ்வொரு விசுவாசிக்கும் சீஷர்களை உருவாக்குவது என்ற ஒரு வாழ்க்கை நோக்கம் உள்ளது. கிறிஸ்துவின் சரீரத்தின் அனைத்து அங்கங்களும் பிரகடனப்படுத்தவும், சீஷர்களை உருவாக்கவும், தொழுவத்திற்கு வெளியே உள்ள ஆடுகளை உள்ளே வரும்படி அழைக்கவும் வேண்டும். மக்களைச் சென்றடைய பொருத்தமான, சூழல்சார் மற்றும் சமகால முறைகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் உருவாக வேண்டும்.
இரத்த ஓட்ட மண்டலம் - போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள்:
வேதாகமத்தில் தலைமைத்துவத்தைக் குறித்து பல உருவங்கள் உள்ளன, அதில் மிக முக்கியமான ஒன்று மேய்ப்பன். போதகர்கள் ஆடுகளுக்கு உணவளிக்க வேண்டும், வழிகாட்ட வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும், ஆறுதல் அளிக்க வேண்டும். அவை உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஊட்டச்சத்தை எடுத்துச் செல்கின்றன. தேவனின் முழு ஆலோசனையையும் போதித்து, தேவ ஜனங்களை மேம்படுத்த வேண்டும்.
நோய் எதிர்ப்பு அமைப்பு - குணப்படுத்துதல்:
இன்று எல்லா மக்களுக்கும் ஆவிக்குரிய, உடல், மன, உணர்ச்சி மற்றும் உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது.
தொடர்பு அமைப்பு - சொல்லுங்கள் மற்றும் கேளுங்கள்:
உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பதன் மூலம் திருச்சபை அடைய முடியாதவர்களையும் அடைய வேண்டும். அதே சமயம் தேவனின் குரலைக் கேளுங்கள்; திறம்பட ஊழியம் செய்வதற்காக மக்கள் முணுமுணுப்பையும் கேளுங்கள் மற்றும் சாத்தானால் ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறலைக் கேளுங்கள்.
நான் கிறிஸ்துவின் சரீரத்தின் உயிருள்ள உறுப்பினரா அல்லது இறந்து துண்டிக்கப்பட்ட நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்