சில கலாச்சாரங்களில், மணல் அல்லது சேற்றில் வேலை செய்வது என்பது தரம் தாழ்ந்ததாகவும் அல்லது ஏதோ அசிங்கமான வேலையாகவும் கருதப்படுகிறது. பொதுவாக விவசாயிகளைப் போல வயல்களில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு சமுதாயத்தில் கனம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. தேவன் ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்கினார் (ஆதியாகமம் 2:7).
1) தேவன் நமக்கு முன்மாதிரி:
தேவன் ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார்; அப்படியென்றால் அவர் தான் முதல் விவசாயி. தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்து, நிலத்தைப் பயிரிட்டு அதன் மீது ஆதிக்கம் செலுத்தும்படி கட்டளையிட்டார். தேவன் மனிதர்களுக்கு உணவாக அனைத்து செடிகள், மரங்கள், பழங்கள் மற்றும் விதைகளையும் வழங்கினார் (ஆதியாகமம் 1:28, 29). வீழ்ச்சிக்குப் பிறகு, "நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் என்றார்" (ஆதியாகமம் 3:17-19). தேவன் பூமியின் உரிமையாளர், மனிதர்கள் பூமியின் பராமரிப்பாளர்கள் அல்லது உக்கிராணத்துவக்காரர்கள்.
2) மனிதர்கள் இருக்கும் வரை விவசாயமும் இருக்கும்:
உலகளாவிய வெள்ளத்திற்குப் பிறகு, பூமி இருக்கும் வரை விவசாயமும் இருக்கும் என்று தேவன் உறுதியளித்தார். ஆம், "பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை" (ஆதியாகமம் 8:22). கர்த்தர் நம் தேசத்தை ஆசீர்வதிப்பதாக வாக்களித்திருக்கிறார்; "கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்" (உபாகமம் 28:8).
3) விநியோகம், பதுக்கல் அல்ல:
பணக்கார முட்டாளின் உவமையில், கர்த்தராகிய இயேசு பதுக்கல் பயனற்றது என்றும், ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வது தான் உக்கிராணத்துவத்தின் சாராம்சம் என்று கற்பித்துள்ளாரே (லூக்கா 12:13-21).
4) விசுவாசம் கொண்டவர்கள்:
விவசாயிகள் விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். "காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்" (பிரசங்கி 11:4); ஆம், சரியான காலசூழ்நிலை (பருவம்) எதிர்பார்க்கிறவர்கள் உழவோ அல்லது நடவோ எதையும் செய்திட மாட்டார்கள் என்பதாக நீதிமொழிகள் 20:4ல் காண முடிகின்றது. "ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்" (நீதிமொழிகள் 21:5). ஒரு சோம்பேறி வயலைக் கவனிப்பதில்லை, அதனால் அது களைகளும் முட்களும் நிறைந்திருக்கிறதாக காணப்படுகிறன்றது (நீதிமொழிகள் 24:30).
5) கடின உழைப்பு:
கிறிஸ்தவர்கள் கடின உழைப்பாளிகளாக விவசாயிகளைப் போல இருக்க வேண்டும் (2 தீமோத்தேயு 2:6). மந்தமான மற்றும் சோம்பேறித்தனமான கிறிஸ்தவ ஊழியர்கள் ஊழியத்திற்கு தகுதியற்றவர்கள். கடின உழைப்புக்கு பவுல் ஒரு முன்மாதிரியாக இருந்தார் (1 கொரிந்தியர் 15:10). கடினமாக உழைக்கும் விவசாயிகள் அதன் அறுவடையில் பங்கு கொள்கிறார்கள். கர்த்தருக்கு நாம் செய்யும் அன்பின் உழைப்புக்கு நித்தியத்தில் நிச்சயம் வெகுமதி கிடைக்கும்.
கெம்பீரத்தோடே (மகிழ்ச்சியோடு) அறுப்பதற்காக கண்ணீரோடே விதைக்கிறேனா? (சங்கீதம் 126:5)
Author : Rev. Dr. J. N. Manokaran