குறிப்பிட்ட மறதி

சிலர் நினைவாற்றலின் சில பகுதிகளை இழக்க நேரிடும், இது செலக்டிவ் அம்னீஷியா (குறிப்பிட்ட மறதியுடையவர்) என்று அழைக்கப்படுகிறது.  இது ஒரு வகையான மருத்துவ பிரச்சனை, அதே போல் ஆவிக்குரிய பிரச்சனையும் கூட.  மருத்துவப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உறவுகள், இருப்பிடங்கள், பொருள்கள் எனப் போன்றவற்றை நினைவில் கொள்ள முடியாது.  இஸ்ரவேல் மொத்த கூட்டமும் தேவன் தங்களுக்குக் கொடுத்த வெற்றியைப் பாடுவதை நிறுத்திவிட்டு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் புகார் செய்ய ஆரம்பித்தார்கள் (யாத்திராகமம் 16:2-3). அட இந்த மறதி மோசமானது அல்லவா. 

 விநியோக பற்றாக்குறை:
 முந்தைய மாதம் பதினைந்தாம் தேதி அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி ஒரு மாதமாகியிருக்கிறார்கள் (யாத்திராகமம் 12:18). அவர்கள் கொண்டுவந்த பொருட்கள் ஒருவேளை முடிந்துவிட்டது, ஏனெனில் அவர்கள் எகிப்திலிருந்து விரைந்து வெளியேறினார்கள்.  இருப்பினும், அவர்களுக்கு ஆடுகளும் மந்தைகளும் இருந்தன, அவைகளை அடித்து புசிக்கலாம்.

 பசி:
 இஸ்ரவேலர்கள் பசியை அனுபவிக்கவில்லை, ஆனால் பசியை எதிர்பார்த்தனர்.  ஊட்டச்சத்தின்மையோ, பட்டினியால் மரணமோ ஏற்படவில்லை.  அவர்களில் யாரும் பசியால் மயக்கம் அடையவில்லை.  ஆனாலும், அவர்கள் உரக்கக் குறை கூறினர்.

 குறைகூறி பாடுதல்:
 இஸ்ரவேலர்கள் தங்கள் மனநிலையை விரைவாக மாற்றிக்கொண்டனர்.  அவர்கள் உற்சாகமாகவும், வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தனர்.  அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படும் போது, ​​அவர்கள் புகார் செய்யத் தொடங்குகிறார்கள்.  இது மனிதர்களின் இயல்பான குணம்.

 ரொட்டி மற்றும் இறைச்சி:
 இஸ்ரவேலர்கள் தாங்கள் சாப்பிட்ட இறைச்சி மற்றும் ஏராளமான ரொட்டிகளை யோசித்து யோசித்து நினைவில் கொண்டனர்.  ஆனால் அதனை எவ்வளவு வேதனையுடனும் கசப்புடனும் சாப்பிட்டார்கள் என்பதை மறந்துவிட்டனர்.  அவர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது, எகிப்தியர்களுக்கு அடிமைகளாக சேவை செய்வதில் எந்த நோக்கமும் இல்லை.  ஆயினும்கூட,  கடந்த காலத்தைப் பற்றிய அவர்களின் தவறான உணர்வு அவர்களை முட்டாளாக்கியது.

 பழி விளையாட்டு:
 இஸ்ரவேலர்கள் மோசேயையும் ஆரோனையும் தீய நோக்கங்களுக்காக குற்றம் சாட்டினர்.  இரண்டு கோடி மக்களையும் கொன்று, அவர்களை பட்டினியால் இறக்கும் தீய நோக்கத்தை இருவரும் கொண்டிருந்தனர் என்றனர்.  கண்ணோட்டம் மற்றவர்களையோ அல்லது தேவனையோ நோக்கியதே தவிர தனிப்பட்ட மதிப்பீடு அல்ல.  நம்முடைய சுமைகளை தேவனிடம் எடுத்துச் செல்வதை விட, பிறரைக் குறை கூறுவதும், கற்பனையான நோக்கத்துடன் அவர்களைப் பிசாசுகள் ஆக்குவதும் எளிது.

 அடிமைகளும் பாவிகளும்:
 இஸ்ரவேலர்கள் அரசியல் சுதந்திரம் பெற்றாலும், அவர்களின் மனதிலும் பழக்கவழக்கத்திலும் அவர்கள் இன்னும் அடிமைகளாகவே இருந்தனர், அடிமைத்தனத்தில் ஒரு சுகபோகத்தை தேடுகிறார்கள்.  அவர்கள் தேவனளித்த விடுதலையை விரைவில் மறந்தனர், அவருடைய நன்மை, அக்கறை, கரிசனை மற்றும் அன்பைப் புரிந்து கொள்ளத் தவறியதால் அவர்கள் பாவிகளாக இருந்தனர்.

 தாழ்மையான ஜெபம்:
 இஸ்ரவேலர்கள் மனத்தாழ்மையோடும் விசுவாசத்தோடும் கர்த்தரிடம் ஜெபித்திருக்க வேண்டும்.  ஜெபமும் துதித்தலும் என்பது குறை கூறுதல், முணுமுணுத்தல், புலம்புதல், சிணுங்குதல் மற்றும் அங்கலாய்த்தல் ஆகியவற்றுக்கான விசுவாச மாற்று மருந்தாகும்.

 நன்றியுணர்வு என்பது எனது அணுகுமுறையும் மற்றும் பழக்கவழக்கமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download