எப்போதும் கடுமையான குளிரை அனுபவிக்கும் சைபீரியாவில் 2016 இல் வழக்கத்திற்கு மாறான கோடை காலமாக இருந்தது. அது காட்டுத்தீயை உருவாக்கியது. நிலைவுறைபனி காரணமாக மண் தளர்த்தப்பட்டது. கால்நடை வளர்ப்பவர்களின் குழந்தைகளுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. அதாவது காய்ச்சல், வயிற்று வலி என்பதாக இருந்து பின்பதாக அக்குழந்தைகள் இறந்தனர். அதனால் அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. நோய்வாய்ப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை விமானத்தில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது. விஞ்ஞானிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கி, அவை நச்சுத்தன்மையுடன் இருப்பதைக் கண்டறிந்தனர். விஷம் எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்த போது, ஒரு வெப்ப அலை அங்கு உறைந்த மண்ணைக் கரைத்தது, அதனுடன், பல தசாப்தங்களுக்கு முன்பு நிலம் அந்திராக்ஸினால் (பிளவைக் காய்ச்சல்) நச்சுப்படுத்தப்பட்டு ஆபத்தாக இருந்தது. 1941 இல் ஆந்த்ராக்ஸ் நோயால் கலைமான்கள் இறந்து போயின. பனியின் கீழ் புதைந்திருந்த ஆந்த்ராக்ஸுடன் கரைந்த விலங்குகளின் சடலம் வெப்பத்தின் காரணமாக வெளிப்பட்டது. அந்த கொடிய நச்சுகள் நோயை பரப்புகின்றன. இந்த ஆந்த்ராக்ஸ் நோய் மற்றும் இறப்பின் முகவர்களாக வெளிப்படும் சாதகமான சூழ்நிலைகளுக்காக காத்திருக்கிறது. இந்த கொடிய ஆந்த்ராக்ஸைப் போலவே, மரித்து போனதாக கருதப்படும் பாவமும் நம்மை அழிக்க உயிரோடு வரக்கூடும்.
பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அதைக் கடக்க அவனுக்கு தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் தேவன் காயீனை எச்சரித்தார் (ஆதியாகமம் 4:7). ஆக, சரியானதையும் நல்லதையும் செய்வதற்குப் பதிலாக, சரியானதைச் செய்யும் தன் சகோதரன் மீது கோபமும் பொறாமையும் கொண்டான். காயீன் பாவம் அவனை வெல்ல அனுமதித்தான் மற்றும் அவன் முதல் கொலையாளியாகவும் மாறிப் போனான். விசுவாசிகளின் வாழ்க்கையில் கூட, எந்த நேரத்திலும் அதன் அசிங்கமான தலையை பாவம் உயர்த்த முயற்சிக்கும் என்பதாக பவுல் எச்சரிக்கிறார் (ரோமர் 7).
"அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்" (யாக்கோபு 1:14,15) என்பதாக யாக்கோபு எழுதுகிறார். கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை (மண், பெண், பொன்) ஆகியவைகள் எந்தவொரு மனிதனையும் அழிக்கும் ஆபத்தான உலகக் கோட்பாடுகள் (1 யோவான் 2:16).
"வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்" (மத்தேயு 15:11) என ஆண்டவராகிய இயேசு போதித்துள்ளார். ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படுமாயின் பாவப் பழக்கங்கள் சுறுசுறுப்பாகவும் உயிரோட்டமாகவும் கணப்படும். எனவே, நம் ஆசைகளையும் சூழல்களையும் பயன்படுத்தி தடுமாறி விழப்பண்ண இருக்கும் சாத்தானை நாம் அனுமதிக்காமல் விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.
பாவத்தில் விழாதபடி நான் கவனமாகவும் எச்சரிப்புடனும் இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran