"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10). "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதிமொழிகள் 14:26). ஆனால் இதற்கு நேர்மாறாக, உலக மக்கள் பொய்களில் அடைக்கலம் புகுந்து, மாயையின் மறைவிலே தஞ்சம் புகுகிறார்கள் (ஏசாயா 28:15). சாத்தானோ பொய்களின் பிதா (யோவான் 8:44). பொய்களில் தஞ்சம் புகுபவர்கள், சாத்தானிடம் தஞ்சம் அடைகிறார்கள், "பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்" (ஏசாயா 28:17) என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகிறார்.
1) பொருள்முதல்வாதம்:
பூமி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் விண்வெளி ஆகிய பூமியின் கூறுகளின் கலவைதான் மனிதர்கள் என்றும்; இறந்த பிறகு வாழ்வு இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள்.
2) மறுபிறவி:
ஒருவர் இறந்த பிறகு இன்னொரு இனமாகப் பிறக்கிறார் என்று எண்ணுபவர்களும் அதிகம். அதாவது பல இனங்களின் பிறப்பைக் கடந்து, மனிதன் இறுதியில் நித்திய யதார்த்தத்தில் கரைந்து விடுகிறான் என்பதாக நம்புகிறார்கள். எனவே, இரட்சிப்பு தாமதமாகிறது ஆனால் மறுக்கப்படவில்லை.
3) சடங்குகள் மற்றும் மரபுகள்:
மத சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவது சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும்; சடங்கு அபத்தமாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ தோன்றினாலும், அது தவறாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
4) அன்னதானம் மற்றும் யாத்திரை:
இறந்த பிறகு ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காகங்கள், மாடுகள், புறாக்கள், தெருவில் இருக்கும் பூனைகள், நாய்கள் மற்றும் சில நேரங்களில் ஏழைகளுக்கும் உணவளிக்கிறார்கள். மற்றவர்கள் நியமிக்கப்பட்ட தலங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள், அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் சொர்க்கத்தை அடைவதற்கான உத்தரவாதம் இருப்பதாக நம்புகிறார்கள்.
5) தவம்:
சிலர் தங்கள் நாக்கில் கூர்மையான உலோகத்தால் குத்துவது, புண்ணிய ஸ்தலங்களுக்கு வெறுங்காலுடன் நடப்பது, வெறும் உடம்பில் உருளுவது போன்ற கடுமையான தவம் செய்கிறார்கள்.
6) காணிக்கைகள்:
தங்க நகைகள் அல்லது நிறைய பணம் மத வழிபாட்டுத் தலங்களில் பெயர் இல்லாமல் கூட காணிக்கையாக கொடுக்கப்படுகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட பணம் தங்கள் பாவங்களைக் கழுவிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
7) தவறான போதனைகள்:
துரதிர்ஷ்டவசமாக, தங்களை ஆன்மீகத் தலைவர்கள் அல்லது வழிகாட்டிகள் அல்லது குருக்கள் என்று கூறிக்கொள்ளும் பலர், அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்கின்றனர். இப்படி கவர்ந்திழுக்கும் தலைவர்கள் அநேககரை பின்தொடர்பவர்களாக ஈர்க்கிறார்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட சில விதிகள் பின்பற்றப்படுகின்றன, அது அவர்களுக்கு திருப்தியான ஒரு உணர்வைக் கொடுக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மனிதர்கள் இரட்சிக்கப்படக்கூடிய ஒரே பெயர். அவரிடம் அடைக்கலம் அடைவதே ஞானம். அவரை நிராகரிப்பது ஆவிக்குரிய (ஆன்மீக) தற்கொலை என்றே சொல்ல வேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குள் நான் அடைக்கலம் புகுந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்