இரண்டாவது மரணம் ஆபத்து
சியரா லியோனில் (ஆப்பிரிக்கா) ஃப்ரீடவுன் ஒரு பயங்கரமான விபத்தை கண்டது. பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திரும்ப (யூ-டர்ன்) செய்ய முயன்றபோது, மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. அப்போது டேங்கர் லாரியில் எரிபொருள் கசிய தொடங்கியது. "பைக் ஓட்டுபவர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் அக்கம் பக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் கசிவு எரிபொருளை சேகரிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர், அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது டேங்கர் வெடித்தது" (தி நியூயார்க் டைம்ஸ், நவம்பர் 6, 2021). சுமார் நூறு பேர் இறந்தனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மக்கள் நினைத்தது என்னவோ தங்களுக்கு நிதி ரீதியாக உதவக்கூடிய எரிபொருளைப் பெறலாம் என்பதுதான். ஆனால், அந்த செயல்பாட்டில் அவர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
பாவம் என்ற நெருப்பு:
ஏசாயா தீர்க்கதரிசி பாவம், தீமை மற்றும் அக்கிரமம் ஆகியவை நெருப்பைப் போன்றது என்று எச்சரிக்கிறார்: "ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும். சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான்" (ஏசாயா 9:18-19).
விபச்சாரம் என்ற நெருப்பு:
விபச்சாரம் மற்றும் ஆபாசப் பாவங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் ஆத்துமாக்களில் நெருப்பை சுமப்பவர்களைப் போன்றவர்கள். ஆம், "தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?" (நீதிமொழிகள் 6:27). இப்படிதான் அந்த முட்டாள் ஜனங்கள் எரிபொருளை பாத்திரங்களில் சேகரிக்க முயன்றனர், அது அவர்களைக் கொன்றது.
பொறாமை என்ற நெருப்பு:
பாவத்திற்கான தூண்டுதல் கவர்ச்சிகரமானதாக இருக்கும், ஆனால் ஒரு நபர் மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏன் என்றால் அது ஒரு நபருக்குள் நுழைந்து மொத்தமாக அழித்துவிட இதயத்தின் வாசலிலே தயாராக இருக்கும். இப்படி அழித்து விடக்கூாதே என்பதற்காக தான் கர்த்தர் காயீனை எச்சரித்தார், ஆனால் அவன் அந்த எச்சரிக்கையை கவனிக்கவில்லை (ஆதியாகமம் 4:7). பொறாமை மற்றும் வெறுப்பின் நெருப்பு அவனை சூழ்ந்தது, அவன் மனிதகுல வரலாற்றின் முதல் கொலையாளி ஆனான்.
இச்சை என்ற நெருப்பு:
இயல்பாகவே அல்லது படைப்பின்படி அந்த சுபாவப்படி நடந்து கொள்வதை மனிதகுலம் மறுத்தபோது, தேவனின் தெய்வீக வல்லமையும் பண்புகளும் தெளிவாகத் தெரியும் என்று பவுல் எழுதுகிறார். எனவே "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:18-25).
அக்கினிக்கடல்:
பாவமுள்ள மனிதகுலத்திற்கான அறுதி இறுதித் தீர்ப்பு என்னவென்றால், அவர்கள் சாத்தானைத் தேர்ந்தெடுத்தார்கள், மேலும் அவனுடன் அவர்கள் நரகமான அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 19:20; 20:14).
நான் பாவத்தை வென்று நித்திய வாழ்வை அனுபவிப்பேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran