வருத்தமா அல்லது உற்சாகமா?

ஒருவர் பிறந்தது முதல் ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார்.  அவர் மீனவனாக இருந்ததால், அந்த நதிநீர் தன் வாழ்க்கையாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்தது.  ஒரு நாள், ஒரு பெரிய வெள்ளம் கரைகளை உடைத்து ஒரு பெரிய பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்தது.  அப்போது அவரது வீடு உட்பட அவரது கிராமமும் நீரில் மூழ்கியது.  அவர் தன் நம்பிக்கையையே இழந்தார், தனது தெய்வமாக கருதிய நதியின் மீது கோபமடைந்தார்.  அந்த விரக்தியில் இனி ஆற்று நீரை குடிப்பதற்குக் கூட பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.  இந்த அவசர சபதம் அவருடைய வாழ்க்கையைப் பரிதாபகரமாக மாற்றியது.  அதற்கு பின்பு அவர் எப்போதும் சோகமாகவே காணப்பட்டார். அவரிடம் விசாரிப்பவர்களிடமெல்லாம் நான் மிகவும் 'அப்செட்' ஆக இருக்கிறேன் என்று சொல்வார்.

கவலைப்படுவதற்கான உரிமை:
தயக்கம் காட்டிய யோனா தீர்க்கதரிசி, இறுதியாக நினிவேயை அடைந்து பிரசங்கித்தார்.  அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்நகர மக்கள் மனந்திரும்பி, உபவாசம் இருந்தனர், ஜெபம் செய்தனர்.  யோனாவுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது; அந்த நகரத்தை தேவன் இப்படி மன்னித்து விட்டாரே என்பதும் தன் தீர்க்கதரிசனம் வீணாகிவிட்டதே என்பதும் அவரின் கோபத்திற்கும் வருத்தத்திற்கும் காரணமாக இருந்தது (யோனா 4:9). யோனாவைப் பொறுத்தவரை, 120000 பேரின் மனந்திரும்புதல் மற்றும் ஒப்புரவாகுதலை விட தன்னுடைய நற்பெயர் அவருக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.

அநேக காரியங்கள்:
கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் நன்கு கவனிக்க வேண்டுமே, சிறந்த உணவுகளை வழங்க வேண்டுமே எனப் போன்ற பல விஷயங்களைப் பற்றி மார்த்தாள் கவலைப்பட்டாள். அதே நேரத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் ஒரு வேலையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்து நேரத்தை வீணாக்குகிறாளே என அவள் தன் சகோதரி மரியாள் மீது கோபமடைந்தாள்.  இருப்பினும், மரியாளோ தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைக் தெரிந்து கொண்டாள் என கர்த்தரால் பாராட்டப்பட்டாள் (லூக்கா 10:42). ஒரே நேரத்தில் பற்பல வேலைகளை  செய்பவர்கள் வருத்தப்படலாம், அதே சமயம் ஒன்றை மாத்திரம் கவனம் செலுத்தி அதற்காக உழைக்கும் போது அது வெற்றியைத் தருகிறது.

கிறிஸ்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஒரே இரட்சகர் மற்றும் இரட்சிப்புக்கான ஒரே வழி என்ற அவரது கூற்றுக்களால் பலர் அவர் மீது வருத்தப்படுகிறார்கள்.  புறஜாதிகளை சமமாக நேசிக்கும் ஒரு மேசியாவை யூத மக்கள் விரும்பவில்லை.  சாதி, வகுப்பு, குலம், இனம், பிரதேசம் என அனைத்து மக்களையும் தேவன் சமமாக நேசிப்பதாக சிலர் வருத்தப்படுகிறார்கள். தோற்பவர்கள் எப்போதும் தனியாள் தானே அன்றி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அல்ல.

திருச்சபை:
சிலர் சபையில் யார் மீதோ அல்லது ஏதோவொன்றுடன் வருத்தப்படுகிறார்கள்.  போதகர்கள் அல்லது மூப்பர்கள் அல்லது உறுப்பினர்கள் அல்லது மரபுகள் என விரும்பாதவர்கள் சிலரை சபையில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.  இழப்பு தனிநபருக்கே தவிர சபைக்கு அல்ல.

 கிறிஸ்துவில் நான் வருத்தப்படுகிறேனா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download