சமூக ஊடகங்களில் ஒரு வால்பேப்பர் (கணினியில் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தும் படம்); "இயேசு கிறிஸ்துவின் பெயரில் பிசாசின் அனைத்து தாக்குதல்களையும் சாபங்களையும் நான் ரத்து செய்கிறேன்" என்ற வாசகங்களுடன் காண முடிந்தது. என்னது ரத்து செய்கிறாரா? அப்படி ரத்து செய்யும் இவர் யார்? அவருக்கு அதிகாரம் உள்ளதா? இந்த வால்பேப்பர் உபகரணங்கள் சாபங்களை ரத்து செய்யுமளவு ‘வசீகரமானதா’?
“உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்" (கொலோசெயர் 2:13-15) என்பதாக பவுல் எழுதுகிறார்.
1) அவரே ஜீவன்:
எல்லா மனிதர்களும் ஆவிக்குரிய ரீதியில் இறந்தவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசத்துடன் வருபவர்கள் ஜீவனைப் பெறுகிறார்கள், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, மேலும் பிரமாணங்களை மீறியதற்காக அனைத்து குற்றச்சாட்டுகளும் சாபங்களும் சிலுவையில் அறையப்படுகின்றன. அவருடைய சீஷர்கள் அவருடன் கூட வாழ்கிறார்கள், அவரையன்றி வேறு ஜீவன் இல்லை.
2) அவரின் அதிகாரம்:
தேவன் அத்துமீறுபவர்களையெல்லாம் அதிகாரம் செலுத்த அனுமதிப்பதில்லை. அவருக்கான மகிமையையோ அல்லது வல்லமையையோ யாராலும் பறிக்க முடியாது. ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தின் விளைவாக தேவன் பூமியை சபித்தார். பாவம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. தேவக் கட்டளைகளை மீறினால் வரும் சாபங்களை அவர் மாத்திரமே ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. எந்த மனிதனாலும் அதாவது போதகரானாலும் அல்லது தீர்க்கதரிசியானாலும் அல்லது மதகுருவானாலும் சாபங்களை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை.
3) அவரின் மரணம்:
"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23). பாவத்தின் விளைவு மரணம் அல்லது கடைசி எதிரி மரணம். கர்த்தராகிய இயேசு தம் மரணத்தின் மூலம் மரணத்தை தோற்கடித்தார் மற்றும் விசுவாசிகளுக்கு எதிரான சாபங்களைப் பற்றிய அனைத்து கையெழுத்தையும் ரத்து செய்தார். கையெழுத்து என்பது கட்டளைகளாக கருதப்படலாம்; அது சாபங்கள் அல்லது ஒவ்வொரு பாவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை அல்லது கைதியின் வாக்குமூலத்தைப் பட்டியலிடுவதாக இருக்கலாம்.
4) அவமாக்கப்பட்ட (நிராயுதபாணியான) பிசாசு:
சாத்தான் ஒரு பல் இல்லாத ஆனால் கர்ஜிக்கும் சிங்கமாக மாறினான், அவன் வெட்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (1 பேதுரு 5:8). இந்த வாக்குத்தத்தம் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது, அது மனிதனிடமிருந்து கிடைத்த பரிசு அல்ல, தேவனிடமிருந்து அருளப்பட்டது.
எல்லா சாபங்களிலிருந்தும் நான் விடுதலை பெறுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran