மோசே பிரமாணம் தீமைக்கு துணை போகும் திரளான பேரை எச்சரிக்கிறது (யாத்திராகமம் 23:2). குழு இயக்கவியல் மற்றும் வெகுஜன வெறி என கூட்டாக அல்லது கும்பலாக (அடியாட்களாக) செயல்படுவதை காணமுடிகின்றது. பொதுவாக, உண்மை கண்டறியப்படுவதற்கு முன்பே சேதம் ஏற்படுகிறது. தந்திரமான நபர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக இத்தகைய அடியாட்களை கையாளுகிறார்கள். இந்த கலகக் கும்பல்களின் அதிர்ஷடமற்ற வாழ்க்கைப் பயணத்தில் ஐந்து படிகள் உள்ளன. அந்த படிகள் என்னவென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராகக் கூச்சலிட்ட கலகக் கும்பலின் மூலம் தெளிவாக காணலாம் (லூக்கா 23:18-21).
1) தந்திரோபாய எண்ணமற்றவர்கள்:
முதலில், இந்த ஜனங்கள் எதைப் பற்றியும் அறியாதவர்கள், எளிதாக நம்புவர்கள். எது உண்மை, யாரை நம்பலாம் என்பதை அவர்கள் பகுத்தறியும் தன்மையற்றவர்கள். பொதுவாக, எது சரியானது அல்லது எது நியாயமானது அல்லது எது தகுதியானது என்பதை அறிய அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். கந்து வட்டிக்காரர்கள் இவர்களைப் போன்றவர்களை மிக எளிதாக தவறாக வழிநடத்துகிறார்கள். இயேசுவிற்கு எதிரான வழக்கில் யூத மதத் தலைவர்கள் இது போன்ற ஜனங்களால் நம்பப்பட்டனர்.
2) மதி நுட்பமற்றவர்கள்:
இரண்டாவதாக, அவர்கள் தூண்டக்கூடிய வகையில் இருக்கும் பேச்சில் கவரப்படுகிறார்கள். குறிப்பாக மற்றவர்களை இழிவுபடுத்தும் மற்றும் கிண்டல் கேலியாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஈர்ப்புக் கொள்கின்றனர். இதனால், பொய்ப் பிரச்சாரங்களில் நம்பிக்கை கொள்ளத் தொடங்குகின்றனர். கட்டுக்கதைகள், பாதியளவிலான உண்மைகள், புனைவுகள் மற்றும் பாதகமான கதைகள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றன. இதனால், இந்த பகுத்தறிவற்ற ஜனங்கள் முட்டாளாகின்றனர். யூத மதத்தின் பிரதான ஆசாரியர்களும் மற்ற மதத் தலைவர்களும் பொய்கள், பாதியளவிலான உண்மைகள் மற்றும் வெறுப்பு ஊறிய கதைகளால் மக்களை போஷித்தனர்.
3) முரட்டாட்டமானவர்கள்:
அவர்கள் தங்கள் நம்பிக்கையில் வேரூன்றி இருக்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் நம்புவதற்கு முரணான எதையும் கேட்க விரும்புவதில்லை. தங்கள் மதம், நம்பிக்கை, மரபுகள், சடங்குகள் மற்றும் ஆலயத்தை அழிக்க ஆண்டவராகிய இயேசு முயற்சி செய்கிறார் என்று மதத் தலைவர்கள் கலகக் கும்பலிடம் தெரிவித்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக போராடுவதை அல்லது சத்தமிடுவதை விட்டு அக்கும்பல் அன்பிற்கு பதிலாக பகுத்தறிவற்ற வெறுப்பையும்; நியாயத்திற்குப் பதிலாக அக்கிரமும்; அமைதிக்குப் பதிலாக வன்முறையையும்; கசப்பும் மற்றும் பழிவாங்குதலையும் தேர்ந்தெடுத்தது.
4) மூலோபாய ஆயுதம்:
இத்தகைய கும்பல்கள் சில சூழ்ச்சியாளர்கள் அல்லது கந்து வட்டிக்காரர்கள் அல்லது கொள்ளைக்கார கும்பல்களின் கைகளில் மூலோபாய ஆயுதங்களாக மாறுகின்றனர். அரசியல்வாதிகள் உட்பட சூழ்ச்சியாளர்களுக்கு இத்தகைய கும்பல் வன்முறைக் கருவியாக மாறக்கூடும்.
5) சாத்தானுக்கும் பலியாள்:
அநீதியான தலைவர்களின் கைகளில் கருவிகளாக இருப்பதால், அவர்கள் சாத்தானின் கைகளில் அநீதியின் கருவிகளாக மாறுகிறார்கள். "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" (ரோமர் 6:13).
நான் கண்மூடித்தனமாக ஏதோ ஒரு கும்பலை பின்தொடராதபடி கவனமாக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran