விரைவான மறதியா?

விரைவான மறதியா?

இஸ்ரவேல் தேசம் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டது. அதில் கொடுமை என்னவென்றால், அது மிக விரைவாகவே நடந்தது. இந்த ஆவிக்குரிய பிரச்சனை இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல, தேவ பிள்ளைகளின் அனுபவத்தில் ஞாபகமறதி ஒரு பகுதியாகும். வேடிக்கை என்னவெனில், அவர்கள் அவருடைய வார்த்தைகளை நம்பினார்கள், ஆனால் அவர் செய்ததை வெகு சீக்கிரத்தில் மறந்தனர். "அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை" (சங்கீதம் 106:12-13). 

1) கருத்தில் கொள்ளவில்லை:
நாம் எப்போதும் தேவனின் அற்புதமான செயல்களையும், கிருபைகளின் திரட்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் (சங்கீதம் 106:7,22). அப்படி உணராமல், சிந்திக்காமல் அல்லது கருத்தில் கொள்ளாதவர்களின் நிலை வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றது, விதைக்கிறவனைப் பற்றிய உவமையில் எப்படி பறவைகளால் பறித்துக் கொள்ளப்படுமோ அதே நிலைதான் ஏற்படும் (மத்தேயு 13:19). துன்பத்தின்போது, மனந்திரும்பி தேவனோடு சமரசம் செய்துகொள்வதற்கு, நம்முடைய வழிகளைப் பரிசீலிக்கவும் அல்லது ஆராயவும் அறிவுறுத்தப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம் (பிரசங்கி 7:14; ஆகாய் 1:7)

2) நினைவில் கொள்ளவில்லை:
"தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்" (யாத்திராகமம் 2:24). இருப்பினும், இஸ்ரவேல் தேசம் வாக்குத்தத்தையோ உடன்படிக்கையையோ நினைவில் கொள்ளவில்லை. அதிலும் வருந்தத்தக்கது என்னவெனில், தேவனுடைய உறுதியான அன்பின் மிகுதியை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை (சங்கீதம் 106:7). 

3) ஆலோசனைக்கு காத்திருக்கவில்லை:
தேவனுடைய ஆலோசனைக்கு காத்திருக்கமால் (சங்கீதம் 106:13) தங்களுடைய சொந்த யோசனைகள், கருவிகள், வழிகள் மற்றும் முறைமைகளில் ஈடுபட்டனர். தங்களின் சொந்த செல்வம், அறிவு, அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றை நம்புவது என்றுமே ஆபத்தானது. அவர்கள் கர்த்தருடைய ஆலோசனையைப் பெறுவதற்காகக் காத்திருக்கத் தவறினார்கள்.

4) கிரியைகள் மறக்கப்பட்டது:
அவரைத் துதித்து போற்றி பாடி (சங்கீதம் 106:12-13) என அவர்கள் நன்றாக ஆரம்பித்தார்கள்; அவருடைய வார்த்தைகளை விசுவாசித்தார்கள். ஆனால் அவருடைய செயல்களை மறந்துவிட்டார்கள். அதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவெனில் கடமைக்காக சமயக் கூட்டங்கள் (சமய மரபு), பிரசங்கங்கள் கேட்பதும் அவரைத் துதித்து பாடுவதும் என சடங்காக இருந்தது. இது தொடர் அன்றாட பழக்க வழக்கமேயன்றி, அவர்களின் இதயங்கள் மற்றும் மனதில் இருந்து தேவனை ஆராதிக்கவில்லை. 

5) தேவனை மறந்து போன நிலை:
இறுதியில், அவர்கள் தேவனை மறந்துவிட்டார்கள் (சங்கீதம் 106:21,22). இது அவர்களின் ஆவிக்குரிய  வாழ்க்கையின் சரிவிற்கான சூழல் என்று தான் சொல்ல வேண்டும். முதலில், அவர்கள் பரிசீலிக்கவும் ஆராயவும் தவறிவிட்டனர். இரண்டாவதாக, அவர்கள் தேவனின் அன்பு, வாக்குறுதிகள் மற்றும் உடன்படிக்கையை நினைவில் கொள்ளத் தவறிவிட்டனர். மூன்றாவதாக, அவர்கள் கர்த்தருக்குக் காத்திருக்கத் தவறினார்கள். இப்படியாக இயல்பாகவே அவர்கள் தேவனை மறந்து அவருடனான உறவை இழந்தனர்.  

ஆவிக்குரிய பழக்க வழக்கங்களான தேவனை கருத்தில் கொள்வது, செய்ததை நினைவில் வைத்திருப்பது மற்றும் அவரின் ஆலோசனைக்காக காத்திருப்பது எனப் போன்ற பண்புகள் என்னிடம் உள்ளதா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download