சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தன்னம்பிக்கை பேச்சாளர் கலந்துக் கொண்டு, குருட்டுத்தன்மை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற குறைபாடுகள் கடந்தகால வாழ்க்கையில் செய்த பாவங்களின் விளைவு என்று கூறியிருந்தார். அதில் கலந்துக் கொண்ட ஆசிரியர் சங்கர் பார்வை குறைபாடு உள்ளவர், ஆனால் முனைவர் பட்டம் பெற்றார், இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தரக்குறைவான இந்த கருத்துகளால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். பின்னர், அவர் மீது சிறப்புத் திறனாளிகள் சங்கம் புகார் அளித்ததால் கைது செய்யப்பட்டார் (இந்தியா டுடே, செப்டம்பர் 8, 2024). வேதாகமத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. “இயேசு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு குருடனைப் பார்த்தார். அவன் பிறந்தது முதல் குருடனாக இருந்தான். இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “போதகரே! இந்த மனிதன் குருடனாகப் பிறந்தான். யார் செய்த பாவம் இவனைக் குருடனாக்கியது? அது இவனது பாவமா? அல்லது இவனது பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டனர்”. இயேசு அவர்களிடம், “இவனது பாவமோ, இவனது பெற்றோரின் பாவமோ இவனைக் குருடன் ஆக்கவில்லை. நான் இவனைக் குணப்படுத்தும்போது தேவனின் வல்லமை இவன் மூலமாக வெளிப்படும்படியாக இவன் குருடனாகப் பிறந்தான்” (யோவான் 9:1-3) என்றார்.
நினைவில் இல்லாத தண்டனை:
8.4 மில்லியன் இனங்களில் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு கடந்து போகும் பல உயிர்கள் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். ஒரு உயிரினத்தின் ஒரு வாழ்நாளில் ஒரு நபர் என்ன செய்கிறார் என்பது அடுத்த உயிரினங்கள் மற்றும் பிற காரணிகள் தீர்மானிக்குமா என்ன! மனிதர்களைப் பொறுத்தவரை, அது ஒரு ஊனமாகவோ அல்லது வறுமையாகவோ அல்லது ஏதேனும் கடினமான இடத்தில் பிறப்பதாகவோ நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், ஆத்மா இறுதியில் அறுதிஇறுதி நபரான தேவனில் கரைக்கப்படும்போது இந்த பிறப்புச் சுழற்சி முடிவடையும் அவ்வளவே. விந்தை என்னவென்றால், எவருக்கும் முந்தைய ஜென்மமோ, அந்த ஜென்மத்தில் செய்த பாவமோ நினைவு இல்லை. ஒரே ஒரு வாழ்க்கை இருக்கிறது என்றும் அதற்குப் பிறகு தீர்ப்பு என்றும் வேதாகமம் போதிக்கிறது (எபிரெயர் 9:27). தண்டனையின் அளவும் ஒரு மர்மம்.
குற்றப்பத்திரிகை இல்லாத தண்டனை:
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீதான குற்றப்பத்திரிகையை வழங்குவதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையை அரசாங்கம் மதிக்கிறது. குற்றத்தின் விவரங்களை வெளியிட மனித அரசாங்கங்கள் கடமைப்பட்டிருந்தால், தெய்வீக அரசாங்கம் ஒரு தாழ்ந்த குடும்பத்தில் பிறந்தது, மாற்றுத்திறனாளியாக பிறந்தது என இந்த நிலையைக் குறித்து குற்றப்பத்திரிகையை வழங்குவதில் எவ்வளவு கவனமாகவும் உணர்திறனாகவும் இருக்குமல்லவா.
தேவ மகிமை:
தேவனுடைய குமாரன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, குறைபாடுள்ளவர்களுக்கு விடுதலை அளிக்கும் போது தேவனின் மகிமை வெளிப்பட வேண்டும், ஆதலால் குணமாக்குகிறேன் என்று கற்பித்தார், பார்வைக் குறைபாடுள்ள மனிதரான சங்கர், முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார், கண்பார்வை இல்லையென்று தர்மம் எடுத்து பிழைக்கவில்லையே, இதில் தேவமகிமை வெளிப்பட்டதை இது காட்டுகிறது.
சத்தியத்தால் மட்டுமே எந்த மனிதனையும் ஊக்கப்படுத்த முடியும், வெறும் கட்டுக்கதைகளால் அல்ல என்பதை நான் உணர்ந்தே
Author: Rev. Dr. J .N. மனோகரன்