தமிழகத்தில் இளம்பெண் ஒருவள் 'தாயின் வயிற்றிலும் கல்லறையிலும் மட்டுமே பெண் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்' என்பதாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள். பள்ளி பாதுகாப்பானது அல்ல, ஆசிரியர்களை நம்ப முடியாது என்றும் எழுதியிருந்தாள். மேலும் பெற்றோருக்கு ஒரு குறிப்பாக; "ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளையும் மகன்களையும் பெண்களையும் மரியாதையுடன் நடத்த கற்றுக்கொடுக்க வேண்டும்" எனவும், மேலும் 'எனக்கு நீதி வேண்டும்' எனவும் உறவினர், ஆசிரியர், அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தாள். விரக்தி, சமூகத்தின் அடாவடித்தனம் மற்றும் நம்பிக்கையின்மை போன்றவற்றால் தன் வாழ்க்கை பறிக்கப்பட்டு விட்டதாக அக்கடிதத்தில் எழுதியிருந்தாள் (என்டிடிவி செய்தி, டிசம்பர் 20 2021).
1) பாதுகாப்பு:
தாயின் வயிற்றில் அல்லது கல்லறையில் தான் ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று இளம்பெண் கூறியுள்ளாள். ஆனால் அந்தோ பரிதாபம்; கருக்கலைப்பு என்ற அச்சுறுத்தலை அவள் மறந்து விட்டாளோ! ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பல பெண் குழந்தைகள் கருக்கலைப்பு செய்யப்படுகின்றதே.
2) நம்பிக்கை:
சமூகத்தில் நம்பிக்கை என்ற அம்சம் மிக மோசமாக அழிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பெற்றோரைக் காட்டிலும் அதிக நேரம் பள்ளிகளிலும் மற்றும் ஆசிரியர்களோடும் தான் நேரத்தை செலவிடுகின்றன; ஆனால் அந்த பள்ளியையும் ஆசிரியரையும் நம்ப முடியவில்லை என்றால் அது எத்தனை கொடூரம்! பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பது ஆசிரியர்கள் அவர்களே கேடுண்டாக்கினால் குழந்தைகள் எங்கே போவார்கள்?
3) உறவுகள்:
இன்று சமூகத்தில், உறவுகள் எல்லாம் அன்பு, உறுதிப்பாடு, தியாகம் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் உறவுகளாக காணப்பட்டதெல்லாம் மறைந்து கெடுக்கும் அல்லது கேடு நினைக்கும் உறவுகளாக மாற்றப்பட்டன. எல்லா உறவுகளிலும் சுயநலமே ஆதிக்கம் செலுத்துகிறது.
4) குழந்தை வளர்ப்பு:
சிறுமிகள்/பெண்களை கண்ணியமாக நடத்துவது போன்ற அடிப்படை இரக்க குணத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கும்படி பெற்றோரிடம் இளம்பெண் வேண்டுகோள் விடுத்துள்ளாள்.
5) நீதி:
சிறுமி நீதி கோரியுள்ளாள். அவளை துன்புறுத்தி, சூழ்ச்சி செய்து, மிரட்டி, அவநம்பிக்கைக்கு தள்ளியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
6) பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள்:
'காம எண்ணம்' கூட விபச்சாரம் எனவும் அதுவும் பத்துக் கட்டளைகளை மீறுவதற்கு சமம் என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு கற்பித்தார் (மத்தேயு 5:27-29).
7) நம்பிக்கையின்மை:
துரதிர்ஷ்டவசமாக, யாராலும் அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியவில்லை. உண்மையில், சபைகள் நம்பிக்கையின் செய்தியைக் கொடுக்கத் தவறிவிட்டது. தற்கொலை சரியான தீர்வு அல்ல, துரதிர்ஷ்டவசமாக அவளால் வேறு வழிகளைக் கனவு காணக்கூட முடியவில்லையே.
"உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" (மத்தேயு 22:39) என்பது புறக்கணிக்கப்படக்கூடாத மற்றும் நிராகரிக்கக் கூடாத, கற்றுக் கொடுக்க வேண்டிய இரண்டாவது பெரிய கட்டளையல்லவா. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், உறவினர்கள், மற்றும் அனைவருக்குமான ஒரு தற்கொலைக் குறிப்பாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இது கண்டித்துள்ளது. சமூகம் தார்மீக இருளில் மூழ்குகிறதா என்ன?சமூக ஒழுங்குகளில் சபைகளுக்கும் பெரும் பொறுப்புள்ளது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ அல்லது தட்டிக் கழிக்கவோ முடியுமா?
நான் வேதாகம விழுமியங்களை (ஒழுங்குகளை) கற்பித்து சமுதாயத்திற்கு நம்பிக்கை அளிக்கும் நபராக இருக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran