சாதிய படிநிலை மக்களை தூய்மையானவர்கள் மற்றும் தீட்டானவர்கள் என பிரிக்கிறது. வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை. அதில் பிராமணர்கள்தான் முதல் வர்ணம். அவர்கள் வர்ண அமைப்பு படிநிலையில் உச்சத்தில் இருந்தனர். பிராமணர்கள் வேதியர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தலை எனக் குறிப்பிடப்படுகிறது. க்ஷத்திரியர்கள் தங்கள் வீரம் மற்றும் போர்த்திறன்களைப் பயன்படுத்தி அரசர்களாகவும், போர்வீரர்களாகவும் மாறுகிறார்கள், மார்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். வைசியர்கள் உணவை உற்பத்தி செய்பவர்கள், வயிற்றால் குறிப்பிடப்படுகிறது. சூத்திரர்கள் மற்ற அனைத்து சாதியினருக்கும் சேவை செய்பவர்கள் மற்றும் அவர்களின் கை அல்லது ஆடைகளை சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்கிறார்கள்.
கண்ணியம்:
தேவ சாயலில் படைக்கப்பட்டதால் அனைவருக்கும் கண்ணியத்தை வேதாகமம் கற்பிக்கிறது (ஆதியாகமம் 1:27). மனித கண்ணியம் தொழிலுடன் இணைக்கப்படவில்லை. எல்லாரும் கர்த்தருக்கென்று அருட்பணி செய்ய வேண்டும் என்று வேதாகமம் கற்பிக்கிறது (கொலோசெயர் 3:23).
தச்சர்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது வளர்ப்புத் தந்தை யோசேப்புடன் சேர்ந்து தச்சராகப் பணிபுரிந்தார் (மாற்கு 6:3). அது கடினமானது, உடல் உழைப்பு, இதனால் உழைப்பாளியின் கண்ணியத்தைப் புரிந்துகொள்ள உதவியது.
மேய்ப்பவர்:
கர்த்தராகிய இயேசுவே நல்ல மேய்ப்பன் என்று கூறினார் (யோவான் 10:11). யாக்கோபு, மோசே, தாவீது ஆகியோர் மேய்ப்பர்களாக சேவை செய்தனர். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை சமமாக நடத்தக்கூடாது என்று கருதினர்.
தோல் பதனிடுபவர்:
அப்போஸ்தலனாகிய பேதுரு விலங்குகளின் தோல்களுடன் பணிபுரிந்த சீமானுடனும் தங்கினார்.
உழவர்:
ஆமோஸ் ஒரு காட்டத்தி மர விவசாயி, தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்டார் (ஆமோஸ் 7:14). பண்ணையில் ஒரு திறந்தவெளியில் வேலை செய்யும் போது, கைகளையும் கால்களையும் அழுக்காக்கியது.
வரி வசூலிப்பவர்:
மத்தேயுவும் சகேயுவும் வரி வசூலிப்பவர்கள்.
மீனவர்கள்:
பேதுரு, யோவான் மற்றும் இன்னும் சில மீனவர்கள் அப்போஸ்தலர்களாக ஆக அழைக்கப்பட்டனர்.
தொழில் புரட்சி:
உடல் உழைப்பு இல்லாத வேலைகளை வழங்குவதால், தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. எனவே, இது பல இளைஞர்களின் கனவு வேலையாகிவிட்டது.
கைவினைஞர்கள்:
பெசலெயேலும் அகாலியாபும் கூடாரத்தைக் கட்டுவதற்கான அனைத்து கூறுகளையும் வடிவமைத்து உருவாக்குவதற்கான திறன்களையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டிருந்தனர், அவர்களே முக்கிய கைவினைஞர்களாக இருந்தனர் (யாத்திராகமம் 36:1).
கோப்லர்:
வில்லியம் கேரி இந்தியாவில் மிஷனரியாக அழைக்கப்பட்டபோது செருப்புத் தொழிலாளியாக இருந்தார். அவர் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை, ஆனால் தேவன் அவரை ஒரு மொழியியலாளர் ஆகவும், வேதாகமத்தை பல மொழிகளில் மொழிபெயர்க்கவும் உதவினார். பரிசுத்த வேதாகமத்தை மக்களின் கைகளில் புழங்குவதற்கு தீட்டான வேலையைச் செய்த ஒரு ‘தீண்டத்தகாதவரை’ தேவன் பயன்படுத்தினார்.
நான் எவரையேனும் அவர்களின் தொழிலுக்காக இழிவுபடுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்