உண்மையில், அனைவரும் செல்வாக்கு செலுத்துபவர்கள், ஒருவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவர்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த சூழல்களில் மற்றவர்களை அதாவது குடும்பம், அக்கம்பக்கம், பணியிடம் எனப் போன்று பாதிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்துபவர்களின் புதிய இனத்தையே உருவாக்கியுள்ளன. இந்த செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அல்லது தீவிர பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இந்த செல்வாக்கு செலுத்துபவர்களைப் பின்பற்றி கேட்கவும் பேசவும் முனைகிறார்கள். செல்வாக்கு பெற்ற குஷா கபிலா, திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் ஆன பிறகு, தனது கணவரான சர்வர் சிங்கிடம் இருந்து பிரிந்தார் (NDTV செய்தி ஜூன் 26, 2023). இருவரும் தங்கள் வளர்ப்பு நாயான மாயாவை இணைந்து வளர்ப்பார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
நோக்கம் இல்லாத திருமணம்:
திருமணம் அனைவருக்கும் கனமுள்ளது என்று வேதாகமம் கற்பிக்கிறது (எபிரெயர் 13:4). கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாக மாறுவது ஒரு உடன்படிக்கை உறவு. தேவன் நியமித்த அமைப்பான திருமணம் பரிசுத்தமானது மற்றும் மதிப்பிற்குரியது. தேவன் ஆதாம், ஏவாளை துணையாக அல்லது உதவியாகக் கொடுத்தார். அவர்கள் ஆழமான, நெருக்கமான அன்பு, ஐக்கியம், ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பு மற்றும் உண்மை தன்மையோடு வாழ்நாள் முழுவதும் ஒன்றுப்பட்டு வாழ அழைக்கப்பட்டுள்ளனர். இதில், வருத்தம் என்னவென்றால், திருமணம் செய்துகொள்ளும் பல இளைஞர்களுக்கு தேவனின் நோக்கம் தெரிவதில்லை.
தேவனின் ஈவு:
"பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4). தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்து, "நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்" (ஆதியாகமம் 1:28). இனப்பெருக்கம் என்பது திருமணத்தில் தேவனின் நோக்கமும் திட்டமும் ஆகும். சில தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. அவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும். எஸ்தர் ஒரு அனாதை, மொர்தெகாயால் தத்தெடுக்கப்பட்டாள், அவள் பின்னர் ராணியாக ஆனாள், அவள் இஸ்ரவேல் தேசத்தை இன ரீதியாக அழிக்கப்படாமல் காப்பாற்றினாள் (எஸ்தர் 2:7).
செல்லப்பிராணி வளர்ப்பு:
உலகம் மறுவாழ்வு பெறுவதற்காக நோவா பேழையில் விலங்குகளை கவனித்துக்கொண்டார். செல்லப்பிராணிகள் மகிழ்ச்சியைத் தருகின்றன, அந்த பொறுப்புடன் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த செல்வாக்கு பெற்ற தம்பதியருக்கு குழந்தை இல்லை, தத்தெடுக்கவில்லை. மாறாக நாயை செல்லமாக வளர்த்து வந்தனர். இருப்பினும், ஒரு குழந்தையின் நிலை போல கருத்தில் கொண்டு, அவர்கள் பிரிந்தபோது (விவாகரத்து) அவர்கள் செல்லப்பிராணியை கவனித்துக்கொள்கிறார்கள். கோடிக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாமல் அல்லது ஆதரவற்றவர்கள் இல்லாமல் அல்லது கவனிப்போர் இல்லாமல் காணப்படுகிறார்கள்; பெரிய பணக்காரர்கள் இதை கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும்.
உண்மையான ஆவிக்குரிய ஜீவியம்:
விதவைகள், அனாதைகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களைக் கவனித்துக்கொள்வது என்பது இரக்கமற்ற உலகில் தேவனின் அன்பை நிரூபணம் செய்வதாகும்.
தேவ அன்பை வெளிப்படுத்தும் உண்மையான செல்வாக்கு உடைய நபரா நான்?
Author: Rev. Dr. J .N. மனோகரன்