நிரந்தர பின்னடைவு

"நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள்" (எரேமியா 8:4‭-‬5) என எரேமியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் தேசத்திடம் பேசினார். தேவனுடைய ஜனங்கள் வீழ்ந்து போவதோ அல்லது தற்காலிகமாக வழிதவறுவதோ சாத்தியம், ஆனால் அவர்கள் மனந்திரும்பி மீண்டு வருவார்கள்.  ஆனால், இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்யவில்லை.

வீழ்ச்சி:
ஒருவர் நடக்கும்போது வழுக்கி விழலாம்.  பெரும்பாலும், மற்றவர்கள் விழுந்ததைக் கவனிப்பதற்கு முன்பே, அவர்கள் முடிந்தவரை விரைவாக எழுந்திருக்க முயற்சி செய்கிறார்கள்.  நீதிமான்களுக்குப் பொறிகள் போடப்படலாம், அவர்களின் வழியில் முட்டுக்கட்டைகள் போடப்படலாம், கண்ணிவெடிகள் வைக்கப்படலாம்.  ஒரு நீதிமான் தீயவர்களின் பொல்லாத திட்டங்களால், வன்முறை மற்றும் சொத்து இழப்பு அல்லது பாவம் போன்றவற்றால் சிக்கலில் விழலாம்.  இது ஏழு முறை கூட நிகழலாம்.  ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் மீண்டும் எழுகிறான்.  "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்" (நீதிமொழிகள் 24:16). அவன் விழுவதால் நீதியுள்ளவன் அல்ல, ஆனால் அவன் மீண்டும் மீண்டும் எழுந்திருப்பதால் அவன் நீதியுள்ளவனாகிறான்.   நீதிமான்கள் மீண்டும் எழுவதால், நீதிமான்களுக்கு ஆறுதலும் உறுதியும் கிடைக்கும், துன்மார்க்கருக்கோ எச்சரிக்கை.

தவறுதலும் திரும்புதலும்:
கொஞ்ச நாள் வழிதவறிச் சென்ற இளைய மகன் மனம் வருந்தி திருந்தி வீடு திரும்பினான்.  அவன் தனது இதயத்தை கடினப்படுத்தவில்லை மற்றும் மனந்திரும்புவதற்கான திறனை இழக்கவில்லை.  அவன் ஒரு மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மீட்டெடுக்கப்பட்டானேயன்றி, ஒரு அடிமையின் தாழ்ந்த நிலைக்கு அல்லவே (லூக்கா 15:11-32).

நிரந்தர பின்னடைவு:
இருப்பினும், எரேமியா மீளமுடியாத பின்னடைவை மையப்படுத்துகிறார்.  அதாவது இதயங்கள் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு கடினமாகிவிட்டன.  மனத்தாழ்மையோ, வருத்தமோ, மனந்திரும்புதலோ இல்லை.

வஞ்சகம்:
அவர்கள் வஞ்சகத்தையும், பொய்யையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு, பொய்களின் பிதாவால் மயங்குகிறார்கள் (யோவான் 8:44). சத்தியத்தை நேசிக்காமலோ மற்றும் சத்தியத்தின்படி வாழாமலோ ஒருவர் இருந்தால், அந்த நபர் சாத்தானின் அபாயகரமான அரவணைப்பில் (கரடி அணைப்பு போன்றது) சிக்கிக் கொள்கிறார்.

 திரும்பிச் செல்ல மறுத்தல்:
 ஊதாரித்தனமான இளைய மகனுக்குத் திரும்புவதற்கான வழி தெரியும், எனவே அவனது தந்தை அவனைத் தேடிச் செல்லவில்லை.  இஸ்ரவேலர் சத்தியத்தையும், பிரமாணத்தையும் அறிந்திருப்பதோடு, வாக்குத்தத்தையும் பெற்றிருப்பதால், திரும்பிச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. ஆனால் ஐயோ, அவர்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனரே.

 நிரந்தர பின்னடைவுக்குள்ளாகாமல் இருக்க நான் விழிப்புடன் இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download