புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், தாயகத்தில் இருந்து வெளியேறி சிதறிப்போனோர், ஆவணமற்றவர்கள், அகதிகள், அந்நியர்கள், யாத்ரீகர்கள் என நாடோடிகளை குறித்து இன்றைய ஊடகங்களில் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தைகள். இன்றைய ஊடகங்கள் மூலம் புலம்பெயர்ந்தோர் பற்றி தெளிவாக தெரிகிறது. உலகளவில், பஞ்சத்தினால் அல்லது உபத்திரவங்களினால் அல்லது போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்கு படகுகளில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் பலர் பயணத்தின் போது அழிந்து போகிறார்கள். இந்தியாவில், கோவிட் முழுஅடைப்பின்போது புலம்பெயர்ந்தோரை ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது, தங்கள் வீடுகளை அடைய அவர்கள் எவ்வளவு மைல்கள் நடந்து சென்றனர் அல்லவா.
அருட்பணியினோர் தவறவிட்டவர்கள்:
உண்மையில், புலம்பெயர்ந்தோர் பொதுவாக உள்ளூர் சபைகள் உட்பட தஞ்சம் புகுந்த இடத்திலும் உபசரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர். இருப்பினும், புரவலன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் புலம்பெயர்ந்தோரை அணுகியதில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்ளன. கென்யாவில் வசித்து வந்த குஜராத்தி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் கபூர் கூறியதாவது; நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கென்யாவில் வசித்து வருகிறோம். கென்யாவில் உள்ள சபைகள் எங்களை அணுகவில்லை. உலகத்தின் இந்தப் பகுதியில் நாங்கள் இருந்தோம் என்று கூட இந்திய திருச்சபை அறிந்திருக்காது. மேலும் நாங்கள் மாபெரும் கட்டளையின்படியும் (மத்தேயு:28:18-20) அனாதைகளாக இருந்தோம்; ஆம் எங்கள் சொந்த மக்களாலும் மறக்கப்பட்டோம், உபசரிக்க வேண்டியவர்களாலும் மறக்கப்பட்டோம்.
கழுகு பார்வை:
கழுகுகளுக்கு 340 டிகிரி பார்வை உள்ளது. மேலும் கழுகுகள் பறக்கும் போது இரண்டு மைல் தொலைவில் இருந்து கூட முயல்களைப் பார்க்க முடியும். சென்றடையாத அல்லது செயல்படாத மக்களைக் கண்டறியவும் கண்டுபிடிக்கவும் அருட்பணி தலைவர்கள் அத்தகைய கழுகுப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கழுகு பார்வை இல்லாததால் அருகில் உள்ளவர்கள், அணுகக்கூடியவர்கள் மற்றும் தயாராக இருப்பவர்கள் என அருட்பணிகளால் தவறவிடப்படுகிறார்கள்.
முக்கியமானவர்கள்:
நாடோடிகள் / புலம்பெயர்ந்தோர் / இடம்பெயர்ந்த சமூகம் எப்போதும் ஒரு திறந்த சமூகம். குறிப்பாக ஆரம்ப ஆண்டுகளில் அவர்கள் இருதயம் மாற்றங்களுக்கும் திறந்திருக்கும். ஒரு புதிய சூழல் அவர்களுக்கு மாற்றியமைக்க மற்றும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். கிறிஸ்துவிற்குள்ளான ஆவிக்குரிய வாழ்க்கை ஒரு சிறந்த அல்லது உன்னதமான வாழ்க்கையான அவர்களின் ஆசைகளை அல்லது விருப்பங்களை நிறைவேற்றுகிறது. இடம்பெயர்ந்த ஆரம்ப மாதங்களில், அவர்கள் தங்கள் சொந்த சமூகத்தின் மரபுகளின் கட்டமைப்பு மற்றும் கண்டிப்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, கிறிஸ்துவுக்காக முடிவெடுக்க அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியே நற்செய்தி வழங்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் பாரம்பரிய மதங்களை வந்தேறிகளாக வந்து தங்கிய நாடுகளிலும் செயல்படுத்தி விடுவார்கள். அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள இந்துக் கோயில்கள், புத்த வழிபாட்டுத் தலங்கள், முஸ்லீம் மசூதிகள், சீக்கிய குருத்வாராக்கள் போன்றவை இத்தகைய போக்குகளுக்குச் சான்றுகளாக உள்ளன.
எனக்கு கழுகு கண் பார்வை இருக்கிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்