பிரமாணத்தை இயற்றுபவரும் மீறுபவரும்

பூமியில் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த மிகப் பெரிய மனிதராக மோசே கருதப்படுகிறார்.  இஸ்ரவேல் புத்திரர் ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகளுக்கு உட்காரும்போதும் நடக்கும்போதும் படுக்கும்போதும் எழும்பும்போதும் நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று மோசே கட்டளையிட்டார்; மேலும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அவர்களுடைய நாட்கள் நீடிக்கும் என்று கர்த்தர் வாக்களித்தார் (உபாகமம் 32. 46-47; 6:6-7).

 விசுவாச துரோகம்:
 மோசே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தாலும், அவருடைய வழித்தோன்றல்கள் அடுத்த ஆறு நூற்றாண்டுகளுக்கு தேசத்தைக் கெடுக்கும் சிலை வழிபாட்டை ஆரம்பித்தனர். தேவனை தொழுது கொள்ளுவதை விட்டு உருவ வழிபாட்டிற்கு வழிதவறினர் என்பது எவ்வளவு மோசமான நிலை அல்லவா.

புறக்கணிக்கப்பட்ட பிரமாணம்:
கெர்சோம் ஆரோன் மற்றும் அவனது சந்ததியினரைப் போல ஒரு ஆசாரியராகவோ அல்லது மோசேயின் அரசியல் வாரிசாக வருவதை தான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.  அதிருப்தியும், மனச்சோர்வும் மற்றும் குழப்பத்திற்கும் ஆளான கெர்சோம், பிரமாணத்தைப் படிக்கவில்லை, அவருடைய மகன் யோனத்தானுக்கும் கற்பிக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

 தனிமனித உருவ வழிபாடு:
எப்பீராயிமைச் சேர்ந்த மீகா தனது தாயின் வெள்ளியைத் திருடி ஒரு விக்கிரகத்தை உருவாக்கினான் (நியாயாதிபதிகள் 17:1-6). மோசேயின் பேரனான யோனத்தான், மீகாவால் ஆசாரியனாக நிச்சயிக்கப்பட்டான், மேலும் லேவியனை ஆசாரியனாகக் கொண்டதில் மகிழ்ச்சியடைந்தான் மீகா (நியாயாதிபதிகள் 17:13).

 தாண் கோத்திரத்தாரின் உருவ வழிபாடு:
பிற்பாடு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர், உருவங்களையும் யோனத்தானையும் தங்களோடு கொண்டு போயினர்; தாண் கோத்திரத்திற்கு கேடு உண்டானது எனலாம். "தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்" (நியாயாதிபதிகள் 18:30).  

அதிகாரப்பூர்வ தேசிய உருவ வழிபாடு:
 நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரவேலின் முதல் ராஜாவான யெரொபெயாம் இரண்டு தங்கக் கன்றுகளை வழிபாட்டுப் பொருட்களாக நிறுவினான், ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான் (1 இராஜாக்கள் 12:29). ஆக பத்து கோத்திரங்களும் தேவனை வணங்குவதை விட்டுவிட்டு சிலை வழிபாட்டைப் பின்பற்றினர்.

அலை அலையாக பாதிப்புகள்:
சிலை வழிபாடு ஒரு தனிநபருடன் தொடங்கி, ஒரு குடும்பம், கோத்திரம் மற்றும் தேசம் வரை நீட்டிக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கான கட்டளை:
குழந்தைகளுக்கு கற்பித்தல், பழக்குவித்தல் மற்றும் பயிற்றுவித்தல் எல்லாம் பெற்றோரின் பொறுப்பு என்பது ஒரு அற்புதமான கட்டளையாகும், அதை சிரத்தையுடன் நிறைவேற்ற வேண்டும்.  அப்படி குழந்தைகளுக்கு உண்மையாக கற்பித்த பிறகும், குழந்தைகள் விசுவாச பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தேவ வார்த்தையை என் சந்ததியினருக்கு நான் சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download