ஒரு போதகர் தனது உடன் ஊழியர்களுடன் இணைந்து ஒரு மனிதனைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்த முயன்றார். இந்த செயல்பாட்டில், அந்த நபர் இறந்து விட்டார், இந்த மரணத்தினிமித்தம் போதகரும் அவரோடு இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 25 ஆகஸ்ட் 2024). உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகும்.
பகுத்தறிவின்மை:
முதலாவதாக, ஒரு கிறிஸ்தவருக்கு இந்த பிசாசை விரட்டும் காரியங்கள், சொந்த வழிநடத்துதலின் பேரிலா அல்லது ஆவியினாலா அல்லது பரிசுத்த ஆவியின் கிருபையினாலா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். போதகர் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்காமல், அவரது மாம்சத்தில் செயல்பட்டார். இரண்டாவது , தீய ஆவிகளை உணரும் அடிப்படை பகுத்தறிவை கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டும் (1 யோவான் 4:1). பகுத்தறிவும் பரிசுத்த ஆவியின் வரம் . துரதிர்ஷ்டவசமாக, அவர் கர்த்தரின் சீஷராக நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பு ஒரு போதகரானார்.
அறிவின்மை:
பல வகையான நோய்கள் உள்ளன. நோய்த்தொற்று அல்லது சுகாதாரம் அல்லது மரபியல் இல்லாமை, மன அழுத்தம் அல்லது கவலை அல்லது கோபம் அல்லது மன்னிக்காத மனப்பான்மை காரணமாக ஏற்படும் நோய் மற்றும் சாத்தானின் தாக்குதல்களால் யோபு பாதிக்கப்பட்டார் (யோபு 2:7-10). ஒரு நபர் நோயுற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது எந்த வகை நோய் என்பதை அறிய பகுத்துணர்வு தேவை. எல்லா நோய்க்கும் சாத்தான் தான் காரணம் என்று சொல்ல முடியாது.
ஆயத்தமின்மை:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மறுரூபமான பிறகு பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் இறங்கியபோது, ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மற்ற சீஷர்களால் ஒரு சிறு பையனைப் பிடித்திருந்த பேயை விரட்ட முடியவில்லை. சிறுவனின் தந்தை கர்த்தராகிய ஆண்டவரை தலையிடுமாறு தேவனிடம் மன்றாடினார். அதற்கு பின்பு, சிறுவன் உடனடியாக குணமடைந்தான். உபவாசம் மற்றும் ஜெபத்தினால் மட்டுமே இப்படிப்பட்ட பிசாசுகளை துரத்த முடியும் என்று கர்த்தர் தம் சீஷர்களுக்கு போதித்தார் (மத்தேயு 17:14-21). அநேகமாக, இந்த போதகர் ஆவிக்குரிய ரீதியில் ஆயத்தமாக இல்லையோ என்னவோ.
உறவு இல்லாமை:
எபேசுவில், பவுல் பயன்படுத்திய துணிகளும் கைக்குட்டைகளும் கூட நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும் பேய்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டன. யூத பிரதான பாதிரியார் ஸ்கேவாவுக்கு ஏழு மகன்கள் இருந்தனர், அவர்கள் பவுலைப் பின்பற்றினர். ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது (அப்போஸ்தலர் 19: 11-16). அங்கிருந்து யூதர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட வேண்டியதாயிற்று.
சாத்தானை எதிர்கொள்ளும் அறிவிலும், ஞானத்திலும், நம்பிக்கையிலும் நான் வளர்ந்திருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்