சில தம்பதிகள் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் செலவுகள், மனச்சுமை மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கள் வளர்ப்பு உள்ளுணர்வை விலங்குகளிடம் செலுத்துகிறார்கள் (தி பிரின்ட், ஜூன் 16, 2024). துரதிர்ஷ்டவசமாக, ஒரு இளம் தம்பதியினருக்கு இரண்டு வருமானங்கள் இருந்தது, ஆனால் குழந்தைகள் இல்லை. வேதாகமம் குடும்பத்தை முதல் அமைப்பாக, உடன்படிக்கை உறவாக நியமித்தது, மேலும் அது பெருகக் கட்டளையிட்டது (ஆதியாகமம் 2:22-24).
இணையான படைப்பாளர்கள்:
சிருஷ்டிகரான தேவன், மனித தம்பதிகளான கணவன் மற்றும் மனைவிக்கு, இன்னும் அநேக மனிதர்களை படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றலை ஒரு இணை படைப்பாளர்களாகக் கொடுத்துள்ளார். ஆனால் சிலர் முட்டாள்தனமாக இந்த சலுகையை மறுக்கிறார்கள்.
செல்லப்பிராணியின் பெற்றோர்:
செல்லப்பிராணி என்பது ஒரு விலங்கு. தாய் விலங்கு குட்டி விலங்கு வாழும் வழியைக் கற்றுக்கொடுக்கிறது. உதாரணமாக தாய் குரங்குகள், குரங்குகளின் பெற்றோராக மரங்களில் குதிக்கவும், பழங்களைப் பறிக்கவும், அதைச் சாப்பிடவும், பாதுகாப்பாக வாழவும் கற்றுக்கொடுக்கின்றன. அதே மனித தம்பதிகள் நாய்களுக்கு குரைக்க, இறைச்சி சாப்பிட கற்றுக்கொடுக்கவில்லையே அல்லது எலிகளைப் பிடிக்க பூனைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்களா என்ன. ஆக, மனிதன் எப்படி தன்னை செல்லப்பிராணியின் பெற்றோர் என்று சொல்ல முடியும்.
நிலைத்தன்மை அல்லது கவலைகள்:
சில தம்பதிகள் தங்கள் முடிவை எளிமையானதாகக் கூறுகிறார்கள். ஒரு செல்லப்பிராணியைக் கொண்டிருப்பது கவலைகள் நிறைந்த வாழ்நாளில் அவர்களின் மனநிலையை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகள் தேவனளிக்கும் ஈவு என்று வேதாகமம் போதிக்கிறது (சங்கீதம் 127:3). பரிசுகளை நன்றியுடன் பெற வேண்டும், அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் வளர்க்க வேண்டும். செல்லப்பிராணிகள் வளர்கின்றன, ஆனால் குழந்தைகள் உருவாகிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மிஞ்சுவார்கள், விஞ்சிவிடுவார்கள், மேலும் தாண்டிவிடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் முதிர்ச்சியடையாதவர்களாகவும், வளர விரும்பாதவர்களாகவும் இருந்தால், அது ஒரு சுமை.
பொறுப்பு குறித்த பயம்:
தொழில் ரீதியாக வெற்றிகரமான ஒரு சில பெற்றோர்கள் தங்கள் சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொறுப்பேற்க விரும்பவில்லை. ஒரு நபர் தனது விருப்பமின்மையை இவ்வாறாக வெளிப்படுத்தினார்: ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் பல மாதங்கள் தூக்கமின்மை, நிதிச் சுமை, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை நிர்வகிக்க வேண்டியிருக்குமே என்றார்.
குழந்தைகளை தத்தெடுத்தல்:
பல குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர், ஏனெனில் அவர்களின் பெற்றோர் நோய், பேரழிவு அல்லது விபத்து காரணமாக இறந்தனர். மேலும் சில பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டதால் குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர். பெற்றோரில் ஒருவர் உயிருடன் உள்ளார், மற்றொருவர் இறந்துவிட்டார், எனவே குழந்தை புறக்கணிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட இளம்தம்பதிகள் எளிதாக ஒரு குழந்தையை தத்தெடுத்து குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க முடியும். எஸ்தர் மொர்தெகாயால் தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண், அவள் ராணியாக ஆனாள் என்பது குறிப்பிடத்தக்கது (எஸ்தர் 2:7).
நான் ஒரு பெற்றோராக இருப்பதில், வேதாகமம் கற்பிக்கும் படி இருக்கிறேன் என்ற புரிதல் உள்ளதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்