அநுதின வாழ்க்கைக்கு அவசியமான குறிப்புகள்; இதோ.
1) அழை:
ஆண்டவராகவும் இரட்சகராகவும் மற்றும் வழிகாட்டியாகவும், நண்பராகவும், ஆலோசகராகவும் மற்றும் எஜமானராகவும் இருக்கும்படி முதலில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அழைக்க வேண்டும்.
2) தீவிரம்:
ஆவிக்குரிய வாழ்க்கை உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் தேவனை நேசிப்பதன் தீவிரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
3) ஆராய்ந்து அறி:
பெரோயா பட்டணத்து கிறிஸ்தவர்கள் எப்படி மனோவாஞ்சையாய் வேதாகமத்தைப் படித்தார்களோ அது போன்று ஆராய்ந்து அறிந்துக் கற்றுக் கொள்ள வேண்டும் (அப்போஸ்தலர் 17:11); நீதிமொழிகள் 23:23ல் கூறப்பட்டது போல "சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே".
4) அறிவி:
தகவல்தொடர்பு என்பது வாழ்க்கையின் சாராம்சம், எனவே சத்தியத்தை அறிவிக்க வேண்டுமெனில் திறம்பட செயலாற்றுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5) பரிந்துரை:
மற்ற எந்த ஆவிக்குரிய செயலையும் விட ஜெபம் என்பது சுயநலமானது. நாம் நாடுகள், மக்கள் குழுக்கள் மற்றும் அருட்பணிகளுக்காக பரிந்துரை செய்ய விரும்ப வேண்டும்.
6) தொடக்கம்:
எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, என்னைச் சுற்றியுள்ள விஷயங்களைச் சுறுசுறுப்பாக, சிரத்தையுடன் தொடங்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
7) கவனம்:
கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களை சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருக்க கற்பித்தார் (மத்தேயு 10:16). எளிமையாக இருப்பது, பிறருக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுப்பது, பிறரைப் பற்றிச் சிறப்பாகச் சிந்திப்பது, ஊழல் செய்யாமல் இருப்பது, தீய செல்வாக்கைத் தவிர்ப்பது புறா போன்றதாகும். இருப்பினும், சூழல் அல்லது சமூகம் அல்லது சமகால உலகம் பற்றி அறியாமல் இருக்கக்கூடாது.
8) தெய்வீகத் தன்மை:
கிறிஸ்துவைப் போல மாறுவது என்பது ஆவிக்குரிய பரிணாம வளர்ச்சி மற்றும் வாழ்க்கை இலக்கு, பரிசுத்த ஆவியானவர் தெய்வீக இயல்பை ஊடுருவி, உள்வாங்கி மற்றும் பதியவைத்து, நம் சரீர இயல்பை சிலுவையில் அறையச் செய்கிறார்.
9) புதுமை:
தேவன் படைப்பாளர், மனிதர்கள் இணை படைப்பாளர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆலோசனைகள் மற்றும் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் என்பது நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
10) முதலீடு:
நேரம், ஆற்றல், அறிவு, பணம் மற்றும் பிற வளங்களின் புத்திசாலித்தனமான முதலீடுகள் நீண்ட காலத்திற்கு பின்பு ஒரு நல்ல ஈவுத்தொகையைக் கொண்டுவருமல்லவா; அதுபோலவே அருட்பணிக்கான முதலீடுகள் நல் பலனைக் கொண்டு வரும்.
11) செல்வாக்கு:
வார்த்தைகள், செயல்கள், அணுகுமுறை மற்றும் நடத்தை மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
12) ஒருங்கிணைத்தல்:
வாழ்க்கை என்பது சிறு சிறு துண்டுகள் அல்ல, ஒருங்கிணைந்ததாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருவுளத்தின் கீழ் எனது சரீரம், உணர்ச்சி, மனம், சமூகம், ஆவி, அறிவுசார் அம்சங்களை ஒருங்கிணைக்க விரும்ப வேண்டும். பாசாங்குத்தனத்திற்கு இடம் இல்லாது, நேர்மை நிச்சயம் வேண்டும்.
அவருடைய பெலத்தின் மூலம் இவற்றைச் செய்ய முடியுமா (பிலிப்பியர் 4:13)?
Author: Rev. Dr. J .N. மனோகரன்