தேவனின் அருட்பணி

வரலாறு முழுவதும் பார்ப்போமேயானால்; தேவன் மனிதர்களை கையாள்வது என்பது கடினமானதாகவே காணப்படுகிறது. அவர் தேர்ந்தெடுத்த தேசமான இஸ்ரவேலோ அல்லது சபையோ தேவ சித்தத்தின்படி செய்ய  கீழ்ப்படிந்திருக்கவில்லை. அவருடைய அழைப்பைப் பெற்றவர்களும் பலமுறை தேவ நியமங்களுடன் ஒத்துப்போகத் தவறிவிட்டனர்.  தாவீதும் சிம்சோனும் விபச்சாரம் செய்து பத்துக் கட்டளைகளை மீறுவதன் மூலம் தோல்வியடைந்தனர்.  மோசே தேவனை மகிமைப்படுத்தத் தவறிவிட்டார், மேலும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்தார்.  ஆபிரகாமின் கவனக்குறைவு இஸ்மவேலும் அவன் சந்ததியினரும் உருவாக வழிவகுத்தது.  ஈசாக்கும் ரெபெக்காளும் பாரபட்சம் காட்டியதால், உடன் பிறந்தவர்களுக்குள்ளேயே கசப்பான போட்டி மனப்பான்மை யாக்கோபின் குடும்பத்திற்குள் வந்தது.  மற்றொரு உதாரணம் தயங்குகிற தீர்க்கதரிசி யோனா. இவ்வளவும் காணப்படினும், அனைத்து மனித தோல்விகளையும் மீறி தேவன் தனது திட்டத்தை நிறைவேற்றினார்.

தயங்குகிற தீர்க்கதரிசி:
ஊழியக்காரர்கள் போகத் தயங்குவதால் எக்காரணம் கொண்டும் தேவனின் பணி நின்றுவிடாது. யோனாவால் தேவ பிரசன்னத்தை விட்டோ அல்லது அவருடைய ஊழிய இடமான நினிவேயை விட்டும் ஓட முடியவில்லை.

தேவனின் களப்பணி:
அவருடைய மனித கருவிகள் ஒத்துழைக்காதபோது, தீர்க்கதரிசிகளுக்கு பாடம் கற்பிக்க தானே முன்வந்து கடல், காற்று, மீன், தாவரங்கள், புழுக்கள் போன்ற பிற படைப்புகளை பயன்படுத்துகிறார்.  காற்று, புயல், கடல் அலைகள் மற்றும் ஒரு பெரிய மீன் என அனைத்தையும் கொண்டு தர்ஷிசிலிருந்து நினிவே வரை யோனாவுக்கு போக வேண்டிய வழியைக் காட்ட சில திருத்தங்கள் தேவைப்பட்டது.

செய்தி போதுமானதாக இல்லை:
யோனா தேவனின் கிருபையையோ அல்லது மன்னிப்பையோ வலியுறுத்தவில்லை மாறாக தீர்ப்பை வலியுறுத்தினான். "இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்" (யோனா 3:4). ஆயினும், பரிசுத்த ஆவியானவர் மக்கள் மனந்திரும்புவதற்கு அவர்களின் இதயங்களில் வேலை செய்தார். ராஜா முதல் அடிமை வரை அனைத்து நகர மக்களும் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

உணர்வற்ற மனப்பான்மை:
மக்களைப் பற்றிய யோனாவின் அணுகுமுறை உணர்வற்றதாக இருந்தது. ஆகையால் மனிதனுக்கு சமமற்ற தாவரங்கள் செடிகள் என ஒப்பிட்டு அவரின் அக்கறை பற்றி விளக்க வேண்டியிருந்தது (யோனா 4:10).  

சுயநலம்:
120000 பேரின் நித்திய எதிர்காலம் அல்லது தேவனின் கிருபை மற்றும் பிற பண்புகளை விட யோனாவிற்கு தனது நற்பெயர் முக்கியமானதாக இருந்தது (யோனா 4:2). 

விளைவு:
"வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ" (யோனா 4:11). 

தேவனின் பணியில் நான் மனமுவந்து பங்கேற்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download