கோராகுவின் கலகம்

கோராகு லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன், கூடாரத்தில் பணிபுரியும் பொறுப்பும், கூடாரத்திலுள்ள பரிசுத்த பொருட்களை எடுத்துச் செல்வதும், பராமரிக்கும் பொறுப்பும் அவனுக்கு வழங்கப்பட்டது (எண்ணாகமம் 16). இருப்பினும், மோசே மற்றும் ஆரோனுக்கு எதிராக அவன் கலகத்தைத் தூண்டினான்.

சிறிய விஷயம்:
கோராகு, லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவனாக இருந்ததால், கூடாரத்தில் சேவை செய்ய தேவனால் அழைக்கப்பட்டான்.  ஆனால் அவன் அதை ஒரு சிறிய விஷயமாகவோ அல்லது முக்கியமற்ற விஷயமாகவோ கருதினான்.  தேவனுக்காக ஊழியம் செய்வது என்பது மிகப் பெரிய பாக்கியம், அதில் சிறிய பணி பெரிய பணி என்று எதுவும் இல்லை.

மனநிறைவு இல்லை:
அவன் தனது அழைப்பில் திருப்தி அடையவில்லை மற்றும் மோசே மற்றும் ஆரோன் போன்ற முக்கிய தலைவர்களைப் போல இருக்க விரும்பினான்.  கோராகு முக்கியமானவனாக மற்றும் பிரபலமாக இருக்க விரும்பினான் அல்லது வாஞ்சித்தான் எனலாம்.  தேவன் ஊழியத்திற்கான பார்வையாளர் அல்ல, சபையே அவனைப் பாராட்ட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

சுய நியமனம்:
கோராகு தனக்கான அழைப்போ நோக்கமோ இல்லாததைத் தானே எடுத்துக் கொண்டான்.  தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்குப் பதிலாக, அவன் தனது சொந்த விருப்பத்தையும் ஆசையையும் செய்யத் தேர்ந்தெடுத்தான்.  கோராகு இஸ்ரவேல் மக்களுக்கான தேவனின் பிரமாணத்தையும் நெறிமுறையையும் புறக்கணித்தான்.

பொறாமை:
மோசேயும் ஆரோனும் மக்களில் முக்கியமானவர்கள் என்று கோராகு பொறாமை கொண்டான்.  இரண்டு தாலந்து பெற்றவன் ஐந்து தாலந்தை பார்த்து பொறாமை கொள்ள முடியாது.  அநேகமாக, ஒரு தாலந்து கொண்ட மனிதன் ஏமாற்றமடைந்து, மற்ற இருவர் மீது பொறாமைப்பட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தத் தவறியிருக்கலாம்.  ஊழியத்தில் பொறாமை மிக ஆபத்தானது.

தேவபக்தியற்ற முறைகள்:
மோசேக்கு எதிராகக் கலகம் செய்ய கோராகு தேவபக்தியற்ற வழிகளைப் பயன்படுத்தினான்.  முதலில் , மோசேயும் ஆரோனும் சபைக்கு மேலாக தங்களை உயர்த்திக் கொண்டதாக அவன் குற்றம் சாட்டினான்.  இரண்டாவது , அவர்கள் விசுவாச மக்களான இருநூற்று ஐம்பது பேரைக் கூட்டி, முழு சபையின் அனுதாபத்தைப் பெற்றார்கள்.  மூன்றாவது , மோசேயையும் ஆரோனையும் மிரட்டினான்.

பொய்யான குற்றச்சாட்டுகள்:
கோராகுவின் சக ஊழியர்களான தாத்தானும் மற்றும் அபிராமும், மோசே வனாந்தரத்தில் மக்களைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டினார்கள்.  எகிப்து பாலும் தேனும் நிறைந்த நாடு என்றும், மோசே அவர்களை வனாந்தரத்திற்கு கொண்டு வந்து ஏமாற்றியதாக  அவர்கள் பொய் சொன்னார்கள். உண்மை என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்தில் கொடுங்கோன்மையின் கீழ் ஒடுக்கப்பட்டனர் மற்றும் புலம்பினார்கள் (யாத்திராகமம் 2:23). அவர்களுக்கு மோசே ஒரு திமிர்பிடித்த இளவரசன்; ஆகையால் தாத்தானும் அபிராமும் மோசேயை சந்திக்க வர மறுத்தனர் (எண்ணாகமம் 16:12-14).

தீர்ப்பு:
கோராகு, தாத்தான் மற்றும் அபிராம், அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் இறந்தனர், மேலும் 14700 ஆதரவாளர்களும் இறந்தனர்.

 எனக்குக் கலக மனப்பான்மை இருக்கிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download