"இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்" (அப்போஸ்தலர் 21:28). அதாவது பவுல் எருசலேம் ஆலயத்திற்குள் சுத்திகரிப்பிற்கான நாட்கள் நிறைவேற்றி வருகையில், சில யூதர்கள் பவுலுக்கு எதிராக தேவாலயத்தில் உள்ளவர்களை தூண்டினார்கள்.
1) கற்பித்தல்:
கமாலியேலின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு தகுதியான போதகராக, பவுல் யூத இளைஞர்களுக்கு கற்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குப் பதிலாக, மேசியா அனைவருக்குமானவர் என்றும், புறஜாதியினரிடம் தேவன் செய்த அற்புதங்களையும் விளக்கிச் சொல்லி பிரசங்கித்தான்.
2) யூதர்களுக்கு எதிராக:
நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் பவுல் புறஜாதிகளை யூதர்களின் ஆவிக்குரிய உயர் நிலைக்கு உயர்த்துகிறார். பவுல் யூதர்களுக்கு இருக்கும் முன்னுரிமைக்கு எதிரானவர் என்றால், அவர் யூதர்களுக்கு எதிரானவர் என்று அர்த்தம். ஆனால் உண்மையில், பவுல் தம்முடைய மக்களை மிகவும் நேசித்தார், "மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே" (ரோமர் 9:3) அப்படி சாபத்தை வாங்குமளவு தன் ஜனங்களை நேசித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்றைய காலங்களுக்கு ஏற்றாற்போல் சொல்ல வேண்டுமானால் பவுல் ஒரு தேச விரோதி என்று முத்திரை குத்தப்பட்டார்.
3) நியாயப்பிரமாணத்திற்கு எதிராக:
விருத்தசேதனம் என்பது ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாகும் (ஆதியாகமம் 17:9-14) . புறஜாதி விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு யூதர்களைப் போல விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பவுல் குரல் கொடுத்தார். "நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" (கலாத்தியர் 5:2). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதே இரட்சிப்புக்கான வழியாகும் என்றும், நியாயப்பிரமாணத்தால் பரிந்துரைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளையோ கிரியைகளைச் செய்வதினால் அல்ல என்று பவுல் பிரசங்கித்தார் (எபேசியர் 2:8-9). கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் தேவைகளை நிறைவேற்றினார், மேலும் நியாயப்பிரமாணம் என்பது நிழலாகும், அதே சமயம் அவரே கருப்பொருளாக இருக்கிறார் (மத்தேயு 5:17; எபிரெயர் 10:1; கொலோசெயர் 2:17). இன்றும், கிறிஸ்தவர்கள் கலாச்சாரத்தை மீறுவதாகவும், கலாச்சாரத்தை பரிசுத்தமாகவும் தெய்வீக ஏவுதலாகவும் கருதுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
4) எருசலேம் ஆலயத்திற்கு எதிராக:
தேவன் சீலோவின் அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ளவில்லை எனில் எருசலேமின் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று எரேமியா எருசலேமில் உள்ள ஆலயத்தின் வளாகத்தில் தைரியமாக அறிவித்தார் (எரேமியா 7:11-12). ஆண்டவர் இயேசுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் ஆலயத்தை அழித்து மீண்டும் கட்டுவதாகக் கூறினார் (யோவான் 18:29-30). கர்த்தர் ஆலயத்தில் வசிக்கவில்லை என்று ஸ்தேவான் அறிவித்தார், இதன் விளைவாக யூதர்கள் அவரைக் கல்லெறிந்தனர் (அப்போஸ்தலர் 7:48-50).
5) வழக்குக்கு எதிராக:
பவுல் எபேசியனாகிய துரோப்பீமை புறஜாதியாரின் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை என்றாலும், அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது.
முன்னுரிமையின் பெருமை, தவறான மேன்மை மற்றும் கலாச்சார ஆணவம் ஆகியவை பலரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரவிடாமல் தடுக்கலாம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவதற்கு நான் தாழ்மையுள்ள நபரா?
Author: Rev. Dr. J. N. Manokara