யெகோவா யீரே

ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு மோரியா மலையை நோக்கி  ஆபிரகாம் விசுவாசமாக நடந்ததுதான் நம் அனைவருக்குமான ஒரு முன்மாதிரி, சவால் மற்றும் உத்வேகம்.  “ஆகவே ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதியாகமம் 22:14).

 1) விசுவாசத்தின் இடம்

ஆபிரகாமும் ஈசாக்கும் விசுவாசத்தின் காரணமாக அவ்விடத்தில் இருந்தார்கள்.  தேவன் எந்த தவறும் செய்ய மாட்டார் என்பதிலும், ஒருவேளை ஈசாக்கை பலியிட நேர்ந்தாலும் தேவன் ஈசாக்கை உயிருடன் எழுப்பித் தர வல்லவர் என்பதை விசுவாசித்தான் (எபிரேயர் 11: 17-19).

 2) கீழ்ப்படிதலின் இடம்:

விசுவாசம் கீழ்ப்படிதலில் வெளிப்படுகிறது.  ஆபிரகாமும் ஈசாக்கும் எந்த தாமதமுமின்றி  தேவன் காட்டிய இடத்தை அடைந்தார்கள்

3) பயண களைப்பின் இடம்

ஒரு பயணிக்கு இலக்கை அடையும் வரை ஓய்வு இல்லை.  அவருடைய சித்தத்தைச் செய்வதற்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தில் நடக்கும்போது நம்முடைய ஆவிக்குரிய பயணம் ஓய்வுபெறும்.

4) அர்ப்பணிப்பின் இடம்

 தனது ஒரே மகன் ஈசாக்கை பலிபீடத்தின் மீது ஒப்படைப்பதன் மூலம், ஆபிரகாம் தேவனின் விருப்பத்திற்கு சரணடைந்தான் (ஆதியாகமம் 22: 9,10)

5) பலியிடும் இடம்

 தேவன் கட்டளையிட்டபடி ஆபிரகாம் ஈசாக்கை பலியாகக் கொண்டுவந்தான். அந்த ஈசாக்கு ஆபிரகாமின் வயதான காலத்தில் பெற்ற மகன், அவனது எதிர்கால  நம்பிக்கை தேவனுடைய வாக்குத்தத்தின் அடையாளம் மற்றும் தேவ உடன்படிக்கையின் பங்காளன்

6) தரிசனத்தின் இடம்:

ஆபிரகாமின் தன்னலமற்ற, தியாகமான, நேர்மையான, சரணடைதலை தேவன் ஆபிரகாமிடத்தில்  கண்டபோது, ​​அவனிடம் பேசினார்.

 7) முன்னேற்பாட்டின் இடம்:

தேவன் தியாகத்திற்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தயார் செய்திருந்தார். இப்போது, ​​தேவன் ஈசாக்கிற்குப் பதிலாக  தயார் செய்து வைத்திருந்த பலிக்கான ஆட்டுக்குட்டியைக் காண ஆபிரகாமினால் முடிந்தது (ஆதியாகமம் 22:13).

8) வாக்குத்தத்தின் இடம்:

கர்த்தர் இரண்டாவது முறையாகப் பேசினார், அவருடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் அதுமட்டுமல்லாமல் மீண்டும் வாக்குறுதியளித்தார் (ஆதியாகமம் 22: 16-18).

9) ஆராதிக்கும் இடம்

ஆபிரகாம் தன் மகனுடன் சேர்ந்து தேவனை ஆராதித்து விட்டு திரும்பி வருவேன் என  தன் வேலைக்காரர்களிடம் தெரிவித்து விட்டு சென்றான் (ஆதியாகமம் 22:5).

10) மகிழ்ச்சியின் இடம்

ஆபிரகாம் நிச்சயமாக தன் கீழ்ப்படிதலின் மகனுக்காக மகிழ்ச்சியடைந்திருப்பான். ஏனென்றால் ஆபிரகாம் விசுவாசத்தோடு மகனை அழைத்துக் கொண்டு பலியிட நடந்து சென்ற போது ஈசாக்கு தகப்பனின் கையை உதறி விட்டு ஓடவுமில்லை, பலிக்காக அவனின் கைகளைக் கட்டும் போது ஆபிரகாமை தள்ளிவிடவுமில்லை (3 யோவான் 1: 4). ஆபிரகாமைப் போலவே நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் இந்த இடத்தை அடைந்திருக்கிறோமா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download