கண்ணுக்கு புலப்படாத

தேவன் ஆவியானவர், அவர் தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்த நினைத்தாலொழிய அவரை காண முடியாது. தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக்கொண்டு, கடவுளை நம்பாதவர்கள் பலர் இருக்கிறார்கள், ஏனென்றால் அவரை கனவுகளிலும்  கற்பனைகளிலும் கூட காண முடியவில்லை.  அஞ்ஞானிகளுக்கு, கடவுள் இருந்தாலும், அது உண்மையோ சத்தியமோ அது  அவர்களின் வாழ்க்கைக்கு தேவையில்லை என நினைக்கிறார்கள்.  எனவே, அவர்கள் கடவுளுக்கு ‘பயப்படுவதேயில்லை’.

இருப்பினும், இந்த மக்கள் கொரோனா கோவிட் 19 என்று முன்பின் அறிந்திராத ஒரு வைரஸால் பீதியடைந்துள்ளனர். தங்களின் வெறுமையான கண்களால் வைரஸை காணாதபோதும் இந்த நாத்திகர்களும் அஞ்ஞானிகளும் அவைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.  இந்த ‘காணப்படாத’ வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுக்க இறந்துவிட்டனர்.  காணப்படாத ‘வைரஸ்’ இருப்பதாக அவர்கள் நம்பியபோதுதான், அவர்களுக்குள் ‘பயம்’ தொற்றுகிறது.

அவற்றின்படி ‘நம்புவதற்கு’ அவர்களுக்கு ஒரு ‘ஆதாரம்’ தேவை.  பல நாத்திகர்கள் விஞ்ஞானிகள் அல்ல, ஆதலால் அவர்கள் வைரஸைப் பற்றி கவனிக்கவும் நம்பவும் அதிநவீன நுண்ணோக்கியை அணுகுகிறார்கள்.  ஆனாலும், விஞ்ஞான சொற்பொழிவுகளை வழங்கும் நபர்களை அவர்கள் எந்தவித அனுபவமின்றி நம்புகிறார்கள்.

ஒரு நபர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், கொரோனா கோவிட் 19 எந்தவொரு நபரையும் கொல்லக்கூடும்.  இந்த குறும்புகார வைரஸை பொறுத்தமட்டில் எந்தவொரு நபராக இருந்தாலும் (விசுவாசி, அவிசுவாசி, நாத்திகர், அஞ்ஞானிகள்) என்று கவலைப்படுவதில்லை, அவர்களில் எவரையும் அழிப்பதற்காக மரணத்திற்கு நேராக இழுத்துச் செல்லும். ‘நுண்ணோக்கி’ உதவியுடன் வைரஸைக் காண முடிந்தால், கடவுளைக் காண இன்னும் கூடுதலான உபகரணங்கள் அல்லது கருவி அல்லவா தேவை.

வெளிப்படுத்துதல்’ என்பது தன்னைப் பற்றிய தேவனின் கிருபையான வெளிப்பாடு ஆகும், இது படைப்பு, கர்த்தருடைய வார்த்தை மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகியோருக்கான சான்றாகும். இதில் ‘விதிமுறைகளும் நிபந்தனைகளும்’ உண்டு.  "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5: 8).

 நம்புகிறோமோ இல்லையோ கொரோனா கோவிட் 19 எந்தவொரு நபருக்கும் ஆபத்தானதே.  அப்படி நம்பிக்கை இழக்கும் நேரங்களிலும் தேவன் மனிதர்களுக்கு பதிலளிக்கிறார்.  முதலாவதாக, "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்" (எபிரெயர் 11: 6). இரண்டாவதாக, விசுவாசிக்காமல் அல்லது நம்பாமல் அல்லது விசுவாசத்தை பயிற்சிவிக்காமல் இருக்கும்போது அவருடைய நியாயத்தீர்ப்பையும் அழிவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வைரஸை நல்லது அல்லது கெட்டது என்று வேறுபடுத்த முடியாது. ஆனால்  தேவன்  ஒரு நபரின் நியாயமான நோக்கங்கள், உந்துதல்கள் மற்றும் ஆசைகள் என எல்லாவற்றையும்  அறிந்தவர், புரிந்துகொள்பவர் மற்றும் மதிப்பிடுகிறவர்.

ஆவியான தேவனை நான் விசுவாசித்து ஆராதிக்கிறேனா? என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download