பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ தலைமை என்பது ஒரு வேலையாள் என்று நினைக்கிறார்கள் (மத்தேயு 20:26-28). மற்றவர்கள் கிறிஸ்தவ தலைமை என்பது ஒரு தொழிலதிபரைப் போல ஒரு உக்கிராணக்காரனாக இருப்பது என்று நினைக்கிறார்கள் (1 பேதுரு 4:10). வேதாகமம் ஒரு மேய்ப்பனை தலைவராக முன்வைக்கிறது (1 பேதுரு 5:2). இருப்பினும், மூன்றின் அத்தியாவசியமான ஒருங்கிணைவு ஒரு பயனுள்ள கிறிஸ்தவத் தலைவரை உருவாக்குகிறது.
வேதாகம மாதிரிகள்:
பல வேதாகம உருவகங்கள் உள்ளன; வேலைக்காரர்கள், உக்கிராணக்காரர்கள், மேய்ப்பர்கள், அடிமைகள், விளையாட்டு வீரர்கள், வீரர்கள், விதைப்பவர்கள், ஆவிக்குரிய உதாரணங்கள், செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அறிஞர்கள். உருவகத்தின் சில குணங்களைக் காட்டும் உதாரணங்கள் வேதாகமத்தில் உள்ளன. உருவகங்களின் அனைத்து அத்தியாவசியங்களையும் சித்தரிப்பதில் கர்த்தராகிய இயேசு ஒரு சிறந்த உதாரணமாக இருக்க முடியும். புரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமானவர்கள் வேலையாள், உக்கிராணக்காரன் மற்றும் மேய்ப்பன்.
ஒரு வழக்கு ஆய்வு:
அலுவலகத்தை சுத்தம் செய்யும் பையன் வராததை ஒரு தலைவர் கண்டுபிடித்தார். முக்கியமான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் அவரே இடத்தைச் சுத்தம் செய்து கூட்டத்துக்குத் தயாரானார். அவர் தனது உத்தியோகபூர்வ (தலைமை அந்தஸ்தை) நிலையைப் பற்றி பொருட்படுத்தவில்லை, ஆனால் ஒரு வேலையாள் போல வேலை செய்யத் தயாராக இருந்தார். இது ஒருமுறை அல்ல பலமுறை நடந்தது. பின்னர் அலுவலக மேலாளரிடம் விவாதித்தார். சிறுவனுக்கு எச்சரிக்கையும், இடைநீக்க உத்தரவும் வழங்கப்பட்டது, பின்னர் வேலையில் இருந்து நீக்கப்பட்டான். பின்னர், ஒருநாள் அந்த பையனை தலைவர் அழைத்தார், அவன் தனது பலவீனம் மற்றும் முட்டாள்தனத்தை விளக்கினான், எல்லாவற்றையும் கேட்டறிந்தார் அவனுக்கு வேறொரு அலுவலகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தார்.
மூன்று பாத்திரங்கள்:
இதில், தலைவர் மூன்று பொறுப்புகளை ஏற்கின்றார். முதலில், அடிமட்ட வேலையைச் செய்யத் தயாராக இருப்பதும், தேவைப்பட்டால் அதைச் செய்து முடிப்பதும் வேலையாள் என்ற மனப்பான்மை. இரண்டாவது , அந்த பையன் மாறவில்லை, அதனால் அவன் அறிவுறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டான். தலைவர் ஒரு உக்கிராணக்காரனாக இருந்தார். மூன்றாவது , இது நடந்த பிறகு, தலைவர் அவனை அழைத்து, பயிற்சியளித்து, அவனுடைய திறமைக்கும் நேரத்திற்கும் ஏற்ற வேலையைப் பெற்றுத் தந்தார். ஆம், இந்த தலைவன் நல்ல ஒரு மேய்ப்பன்.
ஒருங்கிணைந்த மாதிரி:
உருவகங்கள் தலைமையின் சில அத்தியாவசியங்களை சித்தரிக்கின்றன மற்றும் ஒரு மாதிரியை மட்டும் அதிகமாக வலியுறுத்தக்கூடாது. சில தவறான புரிதல்கள் உள்ளன; அதாவது ஒரு தலைவர் எப்போதும் வேலையாளாக இருக்க வேண்டும் அல்லது ஒரு தலைவர் எப்போதும் உக்கிராணக்காரனாக இருக்க வேண்டும் என்று. ஆனால் ஒரு தெய்வீக, பயனுள்ள மற்றும் ஆற்றல்மிக்க தலைவர் அனைத்து உருவகங்களிலும் சிறந்ததை ஒருங்கிணைக்கிறார்.
நான் ஒரு வேலையாளா, உக்கிராணக்காரனா மற்றும் மேய்ப்பனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்