எப்பிராயீம் கோத்திரத்தார் பிரிந்து சென்ற பெரிய கோத்திரத்தாரில் ஒருவர், அவர்கள் கலகம், விசுவாசமின்மை, பின்வாங்குதல் மற்றும் விசுவாசதுரோகம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டனர். "ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்" (சங்கீதம் 78:9). அவர்கள் மனரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் யுத்தத்திற்கு தயாராக இல்லை என்று ஆசாப் புலம்புகிறார்.
போர்க்களம்:
எப்பிராயீம்கள் போர்க்களத்தில் இருந்தனர் ஆனால் போரிடவில்லை.
ஆயுதம்:
எப்பிராயீம்கள் யுத்தத்தை எதிர்கொள்ள ஆயுதம் வைத்துக் கொண்டு தயாராக இருந்தனர். நிஜமாகவே ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறனும் அவர்களிடம் இருந்தது.
போர் தளபாடங்கள்:
எதிரிகளைத் தாக்கும் வெடிமருந்துகளுடனான அம்புகள் அவர்களிடம் இருந்தன. ஒருவேளை அம்புகள் கூர்மையாகவும் விஷம் கலந்த ஆயுதங்களாகவும் இருந்திருக்கலாம்.
போர் நடந்த அன்று:
அவர்கள் புறமுதுகு காட்டியதற்கு பின்னர் நான்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம்; அதாவது போர் தொடங்கும் முன் தப்பியிருக்கலாம் அல்லது போர் தொடங்கும் போதே தப்பி ஓடியிருக்கலாம் அல்லது முதல் காயம்/விபத்தை பார்த்த உடன் ஓடியிருக்கலாம் அல்லது அது ஒரு நீண்ட யுத்தமாக இருக்கும் என்று யோசித்து ஓடியிருக்கலாம்.
பின்னிட்டு திரும்புதல்:
முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் யுத்தத்திலிருந்து பின்னிட்டு ஓடினார்கள். அதுவும் அவர்கள் முதல் அம்பு எய்வதற்கு முன்பே ஓடினார்கள்.
தேவனுடனான உடன்படிக்கை:
கர்த்தருடைய உடன்படிக்கையை மீறியதற்காக யோசுவாவின் கீழ் இஸ்ரவேல் புத்திரர் ஆயில் தோற்கடிக்கப்பட்டதால், எப்பிராயீம்கள் தங்கள் எதிரிகளுக்கு முன்பாக நிற்க முடியவில்லை.
ஆவிக்குரிய மோதல்கள்:
அனைத்து சீஷர்களும் சாத்தானுக்கும் அவனுடைய படைகளுக்கும் எதிராக ஆவிக்குரிய மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தயாராகவும், சுறுசுறுப்பாகவும், மேம்பட்டவர்களாகவும், தீவிரமான ஜெபத்தின் மூலம் ஆயத்தமாகவும் இருக்க வேண்டும் (எபேசியர் 6:10-18).
ஆயத்தமில்லாத மனம்:
எப்பிராயீம் ஜனங்களின் ஆயத்தமில்லாத மனம், மறதி என்னும் பாவத்தின் விளைவாகும். அவர்கள் தங்கள் தேவனையும், அவருடைய உடன்படிக்கையையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய வாக்குறுதிகளையும், அவருடைய கிரியைகளையும், அவர்களுக்காக அவருடைய சித்தத்தையும் மறந்துவிட்டார்கள். கர்த்தர் அவர்களுடன் தொடர்பு கொண்ட உண்மைகளையோ வரலாற்றையோ அவர்கள் அறியவில்லை என்று அர்த்தமல்ல; அவர்கள் அன்றாட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களை மற்றும் சத்தியத்தைப் பயன்படுத்தவில்லை.
கற்பிக்க:
ஆசாப் தனது மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், சந்ததியினருக்கும் கர்த்தருடைய உண்மைத்தன்மையைக் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினார், மேலும் அவர்களின் முன்னோர்களின் வழிதவறல் மற்றும் மறதியைப் பற்றி எச்சரித்தார் (சங்கீதம் 78:5-8). சந்ததியினர் அதே துரோகத்தை மீண்டும் செய்யக்கூடாது என்பதே இதன் நோக்கம்.
சாக்லேட் வீரர்கள்:
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, சீருடை அணிந்த நல்ல தோற்றமுள்ள வீரர்களை, சண்டையிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்று அழைத்தார்.
நான் செயலற்ற சாக்லேட் விசுவாசியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்