ஆசியாவின் அநேக நாடுகளில் கௌரவக் கொலை என்று அழைக்கப்படும் கொடூரக் கொலைகள் பொதுவானது. ஒரு பையன் அல்லது பெண் வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அந்த ஜோடி ஒதுக்கி வைக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது, அதோடு நின்றுவிடாமல் சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள். அதாவது தனிமனிதனை விட சமூகம் பெரியதாக கருதப்படுகிறது. சில நாடுகளில், சர்வாதிகாரிகளால் ஆளப்படும் அரசு அல்லது தேசம் தனிநபர்களை விட பெரியது. தனிமனிதர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. இருப்பினும், மனித குலத்திற்காக தேவனுடைய தரிசனம் என்ன என்பதை வேதத்தில் ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார், இஸ்ரவேல் தேசம் நமக்கான படிப்பினைகளை வழங்குகிறது. தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்த யாவையும் ஆளுகை செய்ய (ராஜாக்களாக) நியமித்தார் (ஆதியாகமம் 1:26-28). ஆதாமும் ஏவாளும் ஆசாரியர்களாக இருந்தனர், அதில் அவர்கள் கர்த்தரை வணங்கினார்கள், அவர்கள் பூமியின் மீது ஆளுகையை நடத்தும்போது ராஜாக்களாக இருந்தனர். மனிதகுலத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தேவன் இஸ்ரவேல் தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமானவர்கள் (யாத்திராகமம் 19:6). தீர்மானங்களையும் தெரிவுகளையும் செய்யும் பாக்கியம் அல்லது உரிமை அனைவருக்கும் உண்டு.
இந்த உரிமையைப் பற்றி தீர்க்கத்தரிசிகள் பேசியுள்ளனர்; "அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று" (மீகா 4:4).
1) செழிப்பும் முன்னேற்பாடும்:
ஒவ்வொருவரும் அவரவருக்கென்று நியமித்த இடத்தில் அமர்ந்திருப்பார்கள். பழைய ஏற்பாட்டில் யூதர்கள் தங்களை திராட்சை செடிகளாக கருதினர். திராட்சை அதன் பலனுக்காக அறியப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் கர்த்தர் தானே மெய்யான திராட்சைக் கொடி என்று கூறினார். இது உணவுப் பாதுகாப்பையும் குறிக்கிறது. "யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" (ஆதியாகமம் 49:22).
2) தேர்வு செய்யும் சக்தி:
ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்ட பிறகு தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தபோது தங்களை மறைத்துக் கொள்ள அத்தி மரத்தின் இலைகளைத் தைத்தனர் (ஆதியாகமம் 3:7). அத்தி மரமானது இஸ்ரவேல் தேசத்தின் அடையாளமாகவும் அதன் இறையாண்மையைக் குறிக்கிறது. ஒவ்வொரு நபருக்குமே தன்னிச்சையாக முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
3) பாதுகாப்பு:
யாரும் அவர்களை பயமுறுத்த மாட்டார்கள். எதிரிகள் அவர்களைத் தாக்க முடியாது. நாட்டில் அக்கிரமம் இல்லை. எனவே, தனிநபர்கள், குடும்பம், சமூகம் மற்றும் தேசத்திற்கு சமாதானம் உள்ளது.
தேவன் எனக்கு வழங்கிய சுதந்திரத்தை நான் மதிக்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran