இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில், மே 2023 முதல் நாம் பலவிதமான மிருகத்தனமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இன அடிப்படை மோதல் மற்றும் இனத் துடைத்தழிப்பு ஆகியவை கொடூரமான வன்முறை மற்றும் பெண்கள் மீது இரக்கமற்ற தாக்குதலுக்கு வழிவகுத்தன. அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; பெண்கள் ஆடைகளை அவிழ்த்தும், நிர்வாணமாக நடக்க வற்புறுத்தியும், அவர்களைச் சுற்றி ஒரு கும்பல் வளைத்துக் கொண்டும், அவர்களை பொதுவெளியில் இழுத்துச் சென்றும், கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது (என்டிடிவி, ஜூலை 21, 2023). பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுற்றி நின்ற ஜனங்கள்; கும்பல் மிருகங்களைப் போல பாதிக்கப்பட்டவர்கள் மீது பாய்ந்தது என சாட்சி கூறினர்.
பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள்:
ஒரு லேவியனும் அவனுடைய துணைவியும் தங்கள் பயணத்தின் போது கிபியாவில் ஒரு இரவு தங்க நினைத்தார்கள். அப்போது அங்கிருந்த துன்மார்க்கமான மனிதர்கள் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து, இரவு முழுவதும் அம்மனிதனோடு வந்திருந்த மறுமனையாட்டியைப் பாலியல் பலாத்காரம் செய்து வாசலில் விட்டனர், அவளோ இறந்து கிடந்தாள். குற்றவாளிகளை சரணடையுமாறு இஸ்ரவேல் சபை கிபியா நகரப் பெரியவர்களைக் கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் உள்நாட்டு யுத்தத்தில் 25000 பென்யமீனியர்கள் கொல்லப்பட்டனர் (நியாயாதிபதிகள் 19,20). பொல்லாத குற்றவாளிகளுக்கு பல ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நன்மை செய்பவர்கள் உள்ளனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
குற்ற கலாச்சாரம்:
"கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்" (தீத்து 1:12) என அத்தீவில் தனது ஊழியத்தைப் பற்றி பவுல் தீத்துவுக்கு எழுதுகிறார். கி.மு. ஏழாம் நூற்றாண்டின் கவிஞரும் கிரேத்தாதீவாரைச் சேர்ந்த தீர்க்கதரிசியுமான க்னோசஸின் எபிமெனிடெஸ் என்பவர் தனது சொந்த கலாச்சாரத்தை விமர்சித்தைக் குறித்து பவுல் மேற்கோள் காட்டுகிறார். தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் தீமை அல்லது துன்மார்க்கத்தின் உருவகமாக மாறிவிட்டனர். அவர்களில் சிலர் அவதூறானவர்கள், அவர்களைப் பேதுரு 'புத்தியற்ற மிருகஜீவன்கள்' என்றும், தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள் (2 பேதுரு 2:12) என்கிறார். வன்முறை அதிகரித்துள்ளது, மனிதர்கள் மிருகங்களைப் போல் ஆகிவிட்டனர். உடலுறவு கொள்வதில் மனிதர்களும் மிருகங்களைப் போலாகி விட்டனர். குடும்ப அமைப்பை ஒரு 'அயல்நாட்டு' யோசனையாக/ வினோதமான ஒன்றாக நிராகரிக்கின்றனர். அக்கிரமம் அதிகரித்து வருவதால், பல சமூகங்களில் உயிர் வாழும் கோட்பாடு உண்மையாகிவிட்டது, அதாவது காட்டில் வாழ்வது போல் ஏதோ பிழைத்துக் கொண்டால் போதும் என்பது போன்ற முறைமைகள். கற்பழிப்பு என்பது ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
இறுதி நாட்கள்:
கடைசி நாட்கள் பயங்கரமானதாக இருக்கும் என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். "எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்" (2 தீமோத்தேயு 3:1-5) இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நீதி, நியாயம் அல்லது பாதுகாப்பைப் பெற முடியாது.
சமூகத்தில் நான் நீதி, நியாயத்தின் வாய்க்காலாக மற்றும் அவற்றைப் போதிக்கும் நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்