அன்ஷிகாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. "நாங்கள் 50 இலட்சம் ரூபாய் ($60,000) செலவழித்தோம். நாங்கள் அவளுக்கு ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் மற்றும் 1.6 மில்லியன் ரூபாய்க்கு ஒரு காரையும் கொடுத்தோம்" என்று அவளது உறவினர்கள் தெரிவித்தனர். ஆனாலும், அவள் தற்கொலை செய்து கொண்டாள். இதன் விளைவாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் இந்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மனைவிகளைத் துன்புறுத்துவதாக ஆயிரக்கணக்கான புகார்களைப் காவல்துறையினர் பெறுகின்றனர், மேலும் 2017 மற்றும் 2022 க்கு இடையில் இந்தியாவில் 35,493 மணப்பெண்கள் வரதட்சணைக் கொடுமையின் நிமித்தம் கொல்லப்பட்டுள்ளனர் (பிபிசி.காம் மே 13, 2024). வரதட்சணை கொடுப்பதும் பெறுவதும் கிரிமினல் குற்றமாகும், இருப்பினும், அது தடையின்றி தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
எரியும் விதவைகள் மற்றும் எரியும் மணப்பெண்கள்:
போதிய வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக இளம் பெண்கள் எரிக்கப்படுவதையோ அல்லது கொல்லப்படுவதையோ பார்ப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. சதி போன்ற தீமையான பாரம்பரியங்களான விதவைகளை எரிக்கும் சமூகத் தீமையை, வில்லியம் கேரி போன்ற மிஷனரிகள் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் கடுமையான சட்டத்தால் (டிசம்பர் 4, 1829 அன்று ஆங்கிலேயர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது) நிறுத்தப்பட்டது. வரதட்சணை என்ற சமூகக் கொடுமையை ஒழிக்க இந்திய திருச்சபை முன்வருமா?
சட்டம் மற்றும் சமூக சீர்திருத்தம்:
சதி தடைச் சட்டம் விதவைகளை எரிப்பதைத் தடுக்க போதுமானதாக இருந்தது, இது தகனம் போன்ற பொது இடங்களில் நடந்தது. இருப்பினும், மதத் தலைவர்கள் என்று அழைக்கப்படும் சிலர் தங்கள் மத மரபுகளுக்கு எதிராக சட்டத்தை வியாக்கியானம் செய்தனர். ஆனால் வரதட்சணைத் தடைச் சட்டம் பயனற்றது, ஏனெனில் இந்தத் தீமை திரைக்குப் பின்னால், வீடுகளில் தனிப்பட்ட முறையில் நடக்கலாம். சட்டம் வரதட்சணையை குற்றமாக கருதினால் மட்டும் போதாது, அப்படிப்பட்டவர்களை சமூகம் குற்றவாளிகளாகவே நடத்த வேண்டும்.
பெண்களுக்கான மதிப்பு:
ஆண்களைப் போலவே பெண்களும் தேவச் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள். அவர்களைத் துன்புறுத்துவது அல்லது அவர்களின் கண்ணியத்தைப் பறிப்பது தேவனுக்கு எதிரான பாவமாகும். கிறிஸ்துவுக்குள், ஆண் என்றும் இல்லை பெண் என்றும் இல்லை, அவர்கள் அனைவரும் மீட்பு தேவைப்படும் பாவிகளே (கலாத்தியர் 3:28).
பேராசையைக் கண்டிக்க வேண்டும்:
இச்சை பேராசைக்கும், சண்டைகளுக்கும், கொலைக்கும் கூட வழிவகுக்கிறது (யாத்திராகமம் 20:17). ஏராளமான உடைமைகள் மகிழ்ச்சிக்கோ, வாழ்வின் அர்த்தத்திற்கோ, நோக்கத்திற்கோ மற்றும் நல் ஐக்கியம் என வாழ்க்கைக்கு எதற்குமே உத்தரவாதம் அளிக்காது (லூக்கா 12:15).
தீமையை எதிர்க்க வேண்டும்:
மனிதர்களை கொலைகாரர்களாக்கும் பேராசையை திருச்சபை எதிர்த்து, சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நான் பேராசை மற்றும் இச்சையிலிருந்து விடுபட்ட ஒரு நபரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்